Good Bad Ugly: அஜித் குமாரின் மாஸ் என்ற பிம்பத்தை தாண்டி ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தில் அஜித்தை சம்பவம் பண்ண வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
பல வருடங்களுக்குப் பிறகு அஜித் இப்படி ஒரு வித்தியாசமான கலக்கல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பாசிட்டிவ் அஜித் குமார், அஜித்குமாரின் நடிப்பு, அஜித்குமாரின் காமெடி சீன்ஸ், அஜித்குமாரின் மாஸ் மட்டும்தான்.
குட் பேட் அக்லி முழு திரை அலசல்
அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய திரை கொண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும். கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்று தங்களுடைய தலைவனை தலையில் தூக்கிக் கொண்டாட கிடைத்த வாய்ப்பு என்று கூட இந்த படத்தை சொல்லலாம்.
படத்தின் மிகப்பெரிய நெகட்டிவ் திரைக்கதை. இந்த படத்தை பேசாமல் ஒரு பேண்டஸி திரைக்களம் என்று கூட சொல்லலாம்.
திடீரென சிம்ரன் உள்ளே வரலாம், ஏன் money heist ப்ரொபஸர் கூட வரலாம். படத்தில் லாஜிக் எதிர்பார்ப்பவர்களுக்கு சுத்தமாக இந்த படம் செட் ஆகாது.
பழைய பாடல்களை மீண்டும் பிரண்டாக்குவது லோகேஷ் கனகராஜுக்கு பிறகு ஆதி செய்து வருகிறார். ஆனால் படம் முழுக்க எக்கச்சக்க 90ஸ் பாடல்களை உள்ளே கொண்டு வந்ததால் எதுவுமே பெரிய அளவில் ரீச் ஆகாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
ரௌடிசம் பிடிக்காத மனைவி, மகனை காப்பாற்ற போராடும் தந்தை என லைட்டா விசுவாசம் படத்தின் சாயல் தான் வருகிறது.
இதைத் தாண்டி காட்சிகள், வசனங்கள், நட்சத்திரங்கள் தான் படத்துக்கான பிளஸ். அஜித் என்பவரை தாண்டி படத்தில் வேறு எதையுமே எதிர்பார்க்காமல் வருபவர்களுக்கு கண்டிப்பாக இது ஒரு பெரிய ட்ரீட் ஆக அமையும்.