அஜித் காப்பாற்றி விட்டும் தரக்குறைவாக நடந்த நடிகை.. போதும் என பாதியிலயே கொந்தளித்து விரட்டிய ஏகே

திரை உலகில் மரியாதையோடும், கண்ணியத்தோடும் நடக்கும் நடிகைகள் மத்தியில் ஒரு சில அதிக பிரசங்கி வேலை செய்யும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். புகழின் உச்சியில் இருக்கும் நடிகைகளே பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருக்கும்போது சில சில்வண்டுகள் தேவையில்லாத வேலை பார்த்து காணாமல் போன கதைகளும் ஏராளம்.

அப்படி தன்னுடைய அதிக பிரசங்கித்தனத்தால் காணாமல் போன ஒரு நடிகை தான் ரகசியா. வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சீனா தானா பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்ட இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதில் அஜித் நடித்த அட்டகாசம் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.

அதில் மிகவும் பிரபலமான தீபாவளி தல தீபாவளி பாடலுக்கு முதலில் பட குழு ரகசியாவை தான் கேட்டிருக்கிறார்கள். அதற்கு சம்மதித்து படப்பிடிப்புக்கு வந்த ரகசியா ரொம்பவும் ஓவராக நடந்து கொண்டாராம். அதாவது அஜித் இருக்கும்போது கால் மேல் கால் போட்டு உட்காருவது, தேவையில்லாமல் அலப்பறை கொடுப்பது என்று ரொம்பவும் ஆடியிருக்கிறார்.

இதைப் பார்த்து பயந்து போன பட குழுவினர் அஜித் சார் முன்னால் இப்படி நடந்து கொள்ளாதீர்கள் என்று கூறி இருக்கின்றனர். ஆனால் அஜித் பெருந்தன்மையாக அவர் மும்பையில் இருந்து வந்தவர். அவருக்கு இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் தெரிய வாய்ப்பில்லை அப்படித்தான் இருப்பார்கள் என்று கூறி இருக்கிறார்.

ஆனால் அவர் தனக்கு பாவம் பார்த்து வாய்ப்பு கொடுத்த அஜித்தையே கடுப்பாக்கி இருக்கிறார். அதாவது படப்பிடிப்பு தளத்தில் ஷூட்டிங் முடிந்து விட்டால் டைரக்டர் தான் பேக்கப் என்று சொல்லுவார். ஆனால் இந்த அதிக பிரசங்கி டைரக்டர் சொல்வதற்கு முன்பே பேக்கப் என்று கூறியிருக்கிறார்.

இதைப் பார்த்து கோபமடைந்த அஜித் இனி இவர் இந்த படத்தில் ஆடக்கூடாது உடனே வெளியே அனுப்புங்கள் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே இவர் பற்றி ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் அஜித் காதுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் அஜித் ரகசியாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்திக் கொள்ள தெரியாத இந்த சில்வண்டு இப்போது பட வாய்ப்புகள் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்.