1. Home
  2. கோலிவுட்

அந்த 3 சம்பவங்களால் மொத்தமாக மாறிய அஜித்.. பிரபலங்களின் இறப்பிற்கு கூட வராத காரணம்

அந்த 3 சம்பவங்களால் மொத்தமாக மாறிய அஜித்.. பிரபலங்களின் இறப்பிற்கு கூட வராத காரணம்
அஜித் பிரபலங்களின் இறப்புக்கு வராததற்கு மூன்று காரணங்கள் உள்ளது.

ஆரம்ப காலங்களில் எந்த ஒரு விசேஷ நிகழ்சியாக இருந்தாலும் முதலில் கலந்து கொள்பவர் அஜித். அதுமட்டுமின்றி தனது பட வெளியிட்டு விழாவிலும் பிரஸ்மீட்டை கூப்பிட்டு பேட்டி கொடுப்பார். அப்படி இருந்தா அஜித் தற்போது மொத்தமாக மாறியதற்கு காரணம் உள்ளது. அவர் வாழ்க்கையில் நடந்த மூன்று சம்பவத்தால் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தற்போது கலந்து கொள்ளாமல் உள்ளார்.

முதலில் பிரஸ் மீட்டில் சர்ச்சையில் சிக்கி வந்த அஜித்துக்கு ரஜினி அறிவுரை கூறியுள்ளார். அதாவது இனிமேல் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்காதே என்று கூறியதால் அஜித் அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார். பிரபலங்களின் இறப்பில் கூட அஜித் கலந்து கொள்ளாததால் அவருக்கு மோசமான பெயர் இருந்து வருகிறது.

இதற்குப் பின்னால் பல வேதனையான சம்பவங்கள் அஜித்துக்கு நடந்துள்ளது. அதாவது அஜித்தின் மேனேஜர் சந்திராவின் தம்பி இறந்த போது அஜித் இறுதி அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். அங்கு அஜித்தை பார்க்க வந்த ரசிகர்கள் கூட்ட நெரிசலில் பாடாய்படுத்தி விட்டனர்.

அது ஒரு துக்க நிகழ்ச்சி போல் இல்லாமல் ரசிகர்கள் ஆரவாரத்துடன் அஜித் பார்த்த குஷியில் கொண்டாடினார்கள். அதேபோல் தான் ஆச்சி மனோரமாவின் இறப்பிற்கும் ஆப்ரேஷன் செய்த காலுடன் அஜித் வந்து இறுதி மரியாதை செலுத்தி விட்டு சென்றார். அப்போதும் பிரச்சனை ஏற்பட்டது.

மேலும் விநியோகஸ்தர் சஞ்சய் மரணத்திலும் அஜித் பங்கு பெற்ற போது பிரச்சனை ஏற்பட்டது. நம்மால் ஒரு துக்க நிகழ்ச்சியில் பிரச்சனை வருகிறதே என்று யோசித்து இறப்பு நிகழ்ச்சிகளில் வருவதற்கு அஜித் தயக்கம் காட்ட ஆரம்பித்தார். ஒருவரின் இறுதி அஞ்சலி நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதால் அஜித் துக்க நிகழ்வில் கலந்து கொள்வதில்லை.

அதேபோல் தனது படத்தை பிரமோஷன் செய்யவும் அவர் விரும்பவில்லை. நல்ல படமாக இருந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற நிலையில் அஜித் உள்ளார். மேலும் இப்போது அஜித்தின் ஏகே 62 படத்திற்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.