நடிகர் அஜித்தை தமிழ் சினிமாவில் நிறைய நடிகர், நடிகைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பதை அவர்கள் பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள். அதைப் போன்று அஜித்தை அடுத்த எம்ஜிஆர் என்று சொல்லியவர் தான் மறைந்த காமெடி நடிகர் மயில்சாமி. அவருக்கு அஜித் மீது அதீத பாசமும், மரியாதையும் உண்டு என்று தற்போது தகவல்கள் வெளியாகின்றன.
நடிகர் மயில்சாமி மறைந்து இரண்டு வாரங்கள் ஆகியும் அவரைப் பற்றி புது புது விஷயங்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. திரை பிரபலங்கள் அவருடன் பழகிய நண்பர்கள் என அனைவரும் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் அவர்கள் சொல்லிய ஒரு தகவல் தான் மயில்சாமி ஒரு தீவிர எம்ஜிஆர் பக்தன் என்பது.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அடுத்து மயில்சாமி தன்னுடைய உயிராக நினைத்தது உலகநாயகன் கமலஹாசனை தான். கமலிடம் டச்சுபாயாக வேலை செய்து வந்த மயில்சாமியை மிமிக்ரி மூலமாக நடிகராக அவர் நடிக்க வைத்ததால் இன்று ஒரு பெரிய நடிகராக முன்னேறினார். இதனால் அவருக்கு கமலின் மீது அதிக பாசம் இருந்து வந்தது.
வீட்டில் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் கமலை கலந்து கொள்ளாமல் முடிவெடுக்க மாட்டாராம் மயில்சாமி. அந்த அளவுக்கு உலகநாயகன் கமலஹாசனை எம்ஜிஆரின் இடத்தில் வைத்திருந்திருக்கிறார் இவர். அதே போல் தான் நடிகர் அஜித்குமாரை அடுத்த எம்ஜிஆர் என்று நினைத்து தான் பாசமாக பழகி வந்திருக்கிறார்.
அதேபோல் அவர் எப்போது கோவிலுக்கு சென்றாலும் அஜித் மற்றும் அவரது குடும்பத்தின் பெயரில் அர்ச்சனை செய்து விடுவாராம். தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கூட மயில்சாமி இதுவரை அர்ச்சனை செய்ததில்லையாம். அந்த அளவிற்கு அஜித் மயில்சாமிக்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை ஆனால் அஜித்தை அடுத்த எம்ஜிஆர் ஆக நினைத்து மனதில் வைத்திருந்திருக்கிறார் மயில்சாமி.
தமிழ் சினிமாவில் மயில்சாமி இப்படி உயர்ந்த இடத்தில் வைத்திருந்த கமல் மற்றும் அஜித் இருவருமே அவரின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளவில்லை. கமல் ட்விட்டரில் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருந்தார். ஆனால் நடிகர் அஜித்குமார் பொதுவெளியில் இதுவரை மயில்சாமியை பற்றி எதுவுமே பேசவில்லை.