1. Home
  2. கோலிவுட்

வாய் சவடால், அஜித் படத்தை தரக்குறைவாக பேசிய இயக்குனர்.. அடாவடி பேச்சுக்கு ஆப்படித்த சம்பவம்

வாய் சவடால், அஜித் படத்தை தரக்குறைவாக பேசிய இயக்குனர்.. அடாவடி பேச்சுக்கு ஆப்படித்த சம்பவம்
அஜித்தின் படத்தைப் பற்றி தரக்குறைவாக பேசிய நிலையில் இயக்குனரின் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்.

Actor Ajith: அஜித் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடைய விடாமுயற்சி படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த சூழலில் அஜித் படத்தை பற்றி இயக்குனர் ஒருவர் தவறாக பேசி சர்ச்சையை கிளப்பி இருந்தார். அவருடைய வாய் சவடாலான பேச்சுக்கு சரியான பதிலடி இப்போது கிடைத்திருக்கிறது.

அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வேதாளம். இந்த படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இந்நிலையில் தெலுங்கில் அதிகம் ரீமேக் படங்களில் நடித்து வருபவர்தான் சிரஞ்சீவி. இப்போது வேதாளம் படத்தின் ரீமேக்கான போலா சங்கர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் அவருக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர் மெஹர் ரமேஷ் போலா சங்கர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தமிழில் வெளியான வேதாளம் படத்தை விட தெலுங்கில் போலா ஷங்கர் படம் 10 மடங்கு பயமுறுத்தும்.

அஜித்தை விட சிரஞ்சீவி இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார் இருக்கிறார். மேலும் வேதாளம் படம் போல இல்லாமல் இதில் சில வித்தியாசமான முயற்சிகளை கையாண்டு இருக்கிறோம் என்று பேசி இருந்தார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி இருந்தது. மேலும் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி போலா சங்கர் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இயக்குனர் பேசிய அடாவடி பேச்சுக்கு இப்போது போலா சங்கர் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது விநியோகஸ்தர் விசாக சதீஷ் போலா சங்கர் படத்தை இப்போது ரிலீஸ் செய்ய கூடாது என நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார். ஏஜெண்ட் படத்தின் பாக்கி தொகையை தயாரிப்பாளர் இன்னும் கொடுக்கவில்லையாம்.

அதை கொடுத்த பின்பு தான் போலா ஷங்கர் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என விசாக சதீஷ் வழக்கு போட்டு இருக்கிறார். ஆகையால் ரிலீஸ் தேதி நெருங்கும் நேரத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சையால் படம் ரிலீஸ் ஆகுமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் போலா சங்கர் படத்தை ஜி ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.