Ajith’s reason for hating mourning programs: விரோதியாக இருந்தாலும் நல்லதுக்கு கலந்துக்கவில்லை என்றாலும், கெட்டதில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் வீட்டில் ஏதாவது துக்கம் ஏற்பட்டு விட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு ஆறுதலாக இருக்க வேண்டும். ஆனால் அஜித்தை பொருத்தவரை கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டாலும் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று பலரும் இவரை விமர்சித்துப் பேசி இருக்கிறார்கள்.
ஆனால் அஜித், துக்க நிகழ்ச்சியை அடியோடு வெறுப்பதற்கான காரணம் என்னவென்று கூறியிருக்கிறார். அதாவது முன்னாடி எல்லாம் எல்லா நிகழ்ச்சிக்கும் சென்று கொண்டு தான் இருந்தாராம். ஆனால் சமீப காலமாகத்தான் இந்த ஒரு விஷயத்தை நிறுத்தி விட்டதாக கூறியிருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்றால் ஆச்சி மனோரமா இறந்த வீட்டுக்குள் முதல் ஆளாக அஜித் போயிருக்கிறார்.
ஆனால் அந்த நேரத்தில் அஜித்துக்கு முட்டில் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அதோடு அந்தத் துக்க நிகழ்ச்சியில் கலந்து ஆச்சி மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று போயிருக்கிறார். போன இடத்தில் இவரை பார்த்ததும் ரசிகர்கள் கூட்டமாக கூடி முண்டிகிட்டு வந்து தள்ளி பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி விட்டார்கள்.
இதை சமாளிக்க முடியாமல் அஜித் ரொம்பவே சிரமப்பட்டு இருக்கிறார். அதன் பிறகு போலீஸ் வந்து தடியடி நடத்தி அந்தக் கூட்டத்தை கலைத்திருக்கிறார். அடுத்ததாக நடிகர் விவேக் மகன் இறப்பிற்கும் அஜித் போயிருக்கிறார். போன இடம் துக்கமான இடம் என்று கூட யாரும் யோசிக்காமல் அஜித் வந்ததும் பொதுமக்கள் ஓவராக கூட்டம் கூடி உள்ளே நுழையாதபடி பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி விட்டார்களாம்.
இதனால் ரொம்பவே நொந்து போன அஜித், ஒரு துக்க நிகழ்ச்சியில் ஆறுதலுக்கு வந்தால் இப்படி ரசிகர்களால் அந்த வீடு இன்னும் அவதிப்படும் அளவிற்கு நிலைமை ஆகுதே என்று யோசித்து இருக்கிறார். அதன் பின் தான் மொத்தமாக இந்த மாதிரி துக்க நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சி போன்று எதிலுமே கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே போய்விட்டார்.
இதனை அடுத்து சமீபத்தில் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி இறப்பிற்கு போயிருக்கிறார். ஆனால் இங்கே மட்டும் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இவருடைய இரங்கலை தெரிவித்து வந்திருக்கிறார். இதே மாதிரி எந்த பிரச்சினையும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருந்தால் அவர் எல்லா நிகழ்ச்சியும் கலந்து கொள்வதில் எவ்வித சிரமமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.