கூலி படத்தில் அஜித்தின் மகன்.. தரமான சம்பவம் இருக்கு!

Ajith : அஜித்தின் குட் பேட் அக்லி படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் இந்த படத்தில் அஜித்தின் மகனாக நடித்திருந்தவர் தான் கார்த்திகேயா தேவ்.

இவர் சிறு வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்த நிலையில் பல திறமைகளை கொண்டிருக்கிறார். சிறந்த நடனம், மாடல் என பல பரிமாணங்களை கொண்டு உள்ளார். தெலுங்கு சினிமாவில் இவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் நடித்திருந்தார். அடுத்தபடியாக சமீபத்தில் மலையாளத்தில் பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணியில் வெளியான எம்புரான் படத்தில் நடித்திருந்தார்.

கூலி படத்தில் நடிக்கும் அஜித் மகன்

தமிழில் அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படத்தில் அவரது மகனாக நடித்திருக்கிறார். இதில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கூலி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அதுவும் தொடர்ந்து பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த சிறு வயதிலேயே நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஆகையால் மிகக் குறுகிய காலத்திலேயே பெரும் உயரத்தை கார்த்திகேயா தேவ் அடைவார் என எதிர்பார்க்கலாம்.