இந்த பொங்கலுக்கு விஜய், அஜித் இருவரும் நேரடியாக மோதி கொண்ட நிலையில் தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த படத்தில் இருந்து வெளிவரும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் அனைத்தும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை பற்றிய எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
ஆரம்பத்தில் இப்படத்தை இயக்க இருந்த விக்னேஷ் சிவன் இப்போது விலகியதை அடுத்து மகிழ் திருமேனி படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வந்தது. தற்போது அதன் முடிவில் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் இயக்குனரை லண்டன் வரவழைத்து அனைத்து விஷயங்களையும் பேசி முடிவெடுத்து இருக்கிறார்.
அந்த வகையில் ஏகே 62 திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதியாகி இருக்கிறது. மேலும் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இப்படி அனைத்தும் முடிவான நிலையில் இன்னும் ஏன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மட்டும் வெளியாகவில்லை என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது. அவ்வளவு ஏன் இதுவரை இது தொடர்பாக ஒரு போட்டோ கூட வெளியாகவில்லை.
இதற்குப் பின்னணியில் பல குழப்பங்கள் இருக்கிறதாம். அதாவது அஜித் இந்த படத்தை ஆறு மாத காலத்திற்குள் முடித்தே தீர வேண்டும் என்று கட்டளையாக கூறிவிட்டாராம். அது மட்டுமல்லாமல் படம் ஆரம்பிக்கும் போதே ரிலீஸ் தேதி உள்ளிட்ட அனைத்தையும் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதுதான் பட குழுவினரை தற்போது கலங்கடிக்க வைத்திருக்கிறது.
ஏனென்றால் மகிழ் திருமேனி படத்தை மிகவும் பொறுமையாக பார்த்து பார்த்து எடுக்கக் கூடியவர். அப்போதுதான் அவர் நினைத்த காட்சிகள் தத்ரூபமாகவும், எதார்த்தமாகவும் வரும் என்பது அவருடைய எண்ணம். ஆனால் அஜித் இப்படி அவசரப்படுத்துவது அவருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் புரிந்து கொண்ட தயாரிப்பு நிர்வாகமும் அஜித்துக்கு இதைப் பற்றி கூறியிருக்கிறார்கள். மேலும் இயக்குனரை அவருடைய இஷ்டத்திற்கு விட்டால்தான் படம் தரமாக வரும்.
அப்பொழுதுதான் நமக்கும் அந்த படம் திருப்தியை கொடுக்கும் என்று கூறியிருக்கின்றனர். அத்துடன் ரிலீஸ் தேதியை பிறகு அறிவித்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கின்றனர். ஆனால் அஜித் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறாராம். இதற்கு இரு காரணங்கள் இருக்கிறது. அதாவது இந்த படத்தையும் விஜய்யின் லியோ படத்துடன் மோத வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறது. அத்துடன் அவர் உலக சுற்றுப்பயணம் செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறார். இப்படிப்பட்ட காரணங்களால் தான் ஏகே 62 தாமதமாகி வருகிறது.