விஜய்யை ஓவர்ட்டேக் செய்த நடிகர்.. சம்பளத்திலும் டாப் வசூலிலும் டாப்

தளபதி விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு, 275 கோடி இவர் சம்பளமாக பெறுகிறார் என்றும், இதுவே, நடிகர்கள் வாங்கும் அதிக சம்பளம் என்று தகவல் வெளியாகி இருந்தது. 

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயரை விஜய் பெற்றுள்ளார். தி கோட் படத்திற்காக அவர் ரூ.200 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் பரவலாக வெளிவந்தன.  அதுமட்டுமின்றி இவர் தளபதி 69 படத்திற்கு வாங்கும் சம்பளம் பாலிவுட் நடிகர்களை விடவும் அதிகம், ஆனால் ஒரு 1000 கோடி வசூல் கூட தரவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவல் விஜய் ரசிகர்களையே ஷாக் ஆகவைத்துள்ளது. 

விஜய் சம்பளத்தை முந்திய தெலுங்கு நடிகர்

பாலிவுட்டை பொறுத்தவரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஷாருக்கான். அவர் கடைசியாக வாங்கிய சம்பளம் 250 கோடி. இந்த நிலையில் அவரை ஓவர்ட்டேக்  செய்த விஜய் தளபதி 69 படத்திற்கு, 275 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது விஜயை முந்தியுள்ளார் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்.  அவருடைய நடிப்பில், அடுத்ததாக வெளிவர இருக்கும், புஷ்பா 2படத்திற்கான ப்ரோமோஷன் செலவுகள் மட்டுமே 100 கோடியாகியுள்ளதாக தகவல் கிடைத்திருந்தது. 

இப்படி இருக்க, புஷ்பா 2 படத்தில் நடிப்பதற்காக அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம் வாயை பிளக்க வைத்துள்ளது. ஆம். புஷ்பா 2 படத்தில், 300 கோடி ரூபாய் அல்லு அர்ஜுன் சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இதுதான் இருப்பதிலேயே Highest salary ஆக பார்க்கப்படுகிறது. 

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment