ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்யும் அல்லு அர்ஜுன்.. அட்லீ போடும் கணக்கு
Allu Arjun : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் அட்லீ, அல்லு அர்ஜுன் கூட்டணியில் படம் உருவாகிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இதில் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
அதில் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகி இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதன் பிறகு உள்ள இரண்டு நடிகைகளில் பாலிவுட் ஒரு நடிகை இடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த சூழலில் ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்ய உள்ளார் அல்லு அர்ஜுன்.
அதாவது இந்த படம் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என்பதால் நிறைய சி.ஜி காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருக்கிறதாம். ஆகையால் அக்டோபர் வரை படப்பிடிப்பு நடத்தி அதன் பிறகு சிஜி வேலையை அட்லீ செய்ய உள்ளாராம்.
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன்
அந்த இடைப்பட்ட நேரத்தில் அல்லு அர்ஜுன் வேறு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதாவது த்ரீ விக்ரம் படத்தில் ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடிப்பதாக இருந்தது. அந்தப் படம் தான் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு மீண்டும் அட்லீ அல்லு அர்ஜுன் படம் தொடங்க உள்ளது. மேலும் புஷ்பா படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றி அடைந்த நிலையில் மூன்றாம் பாகம் எப்போது தொடங்கும் என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றார்கள்.
இந்த படங்களை முடித்த கையோடு தான் அல்லு அர்ஜுன் புஷ்பா 3 படத்தில் இணை இருக்கிறார். இவ்வாறு அல்லு அர்ஜுன் ப்ரேக் இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
