எம்எல்எம் மோசடி, சஞ்சீவ் உடன் விவாகரத்தா.? ஆல்யா மீது பாய்ந்த குற்றச்சாட்டு

Sanjeev – Alya Manasa : சின்னத்திரை நடிகை ஆலியா மானசா தன்னுடன் நடித்த சக நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சமீபத்தில் சஞ்சீவ் உடன் ஆல்யாவுக்கு விவாகரத்து என்று ஒரு செய்தி இணையத்தில் வெளியாகி இருந்தது.

அதோடு இல்லாமல் ஆல்யா மானசா பெயரில் எம்எல்எம் மோசடி நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் MV3 என்ற எம் எல் எம் மோசடி பூதாரம் எடுத்த நிலையில் ஆல்யா பெயரிலும் இவ்வாறு நடந்து இருப்பதாக கூறப்பட்டது. அதாவது ஆலியா மானசா சமீபத்தில் கார், பங்களா என அடுத்தடுத்து வாங்கி இருந்தார்.

டிவி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட போது ஆலியா மானசா இவ்வாறு வசதியாக வாழ்வதற்கு எம்எல்எம் நிறுவனத்தில் முதலீடு செய்தது தான் காரணம் என்று சொன்னதாக வதந்தியாக ஒரு வீடியோ பரவி உள்ளது. இதனால் பலர் அந்த எம்எல்எம் நிறுவனத்தில் முதலீடு செய்து வந்துள்ளனர்.

ஆல்யாவுக்கு தெரிந்தவர்கள் நேரடியாகவே இதை பற்றி கேட்கும் போது தான் அவருக்கு இந்த விஷயம் தெரிந்துள்ளது. மேலும் ஒரு வருடத்திற்கு முன்பாக டிவியில் நான் பேட்டி கொடுத்ததை தவறாக சித்தரித்த பதிவிட்டுள்ளதாக கூறியிருக்கிறார். இப்போது வீடு மற்றும் பங்களா ஆகியவற்றிற்கு இஎம்ஐ-யை டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்து கட்டி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் ஆல்யா பெயரில் நடக்கும் இந்த மோசடிக்கு சைபர் கிரைமில் புகார் கொடுத்திருக்கிறார். அதோடு சஞ்சீவி உடன் விவாகரத்து என்ற வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் ஒன்றாக இருக்கும் ஷார்ட்ஸ் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →