1. Home
  2. கோலிவுட்

கையில் குழந்தையோடு அமலாபால் வெளியிட்ட போட்டோ.. ஒரு நிமிஷம் தல சுத்திருச்சு

கையில் குழந்தையோடு அமலாபால் வெளியிட்ட போட்டோ.. ஒரு நிமிஷம் தல சுத்திருச்சு

Actress Amala Paul: தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் கவனிக்கப்படும் நபராக அமலாபால் உள்ளார். சர்ச்சைகளின் நாயகியான இவர் விவாகரத்து செய்த கையோடு சுதந்திர பார்வையாக சுற்றித் திரிந்தார்.

அதே சமயத்தில் சில படங்களில் நடித்தும் வந்தார். தற்போது மலையாளத்தில் இவர் நடித்துள்ள ஆடுஜீவிதம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேபோல் கர்ப்பமாக இருக்கும் இவருடைய ஒவ்வொரு அசைவுகளும் மீடியாவில் வைரலாகி வருகிறது. திடீரென இவர் காதலரை அறிமுகப்படுத்திய சூட்டோடு திருமணத்தையும் முடித்தார்.

அதற்கு அடுத்த சில வாரங்களில் கர்ப்பமாக இருக்கும் அறிவிப்பையும் வெளியிட்டார். இது பெரும் அதிர்வலையை கிளப்பிய நிலையில் அமலா பால் இப்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கையில் குழந்தையுடன் அமலா பால்

அந்தப் புகைப்படங்களை அவர் தன் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் இவர் கலந்து கொள்ளும் பார்ட்டி, விழாக்கள் ஆகியவற்றின் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கையில் குழந்தையுடன் அவர் வெளியிட்டு இருக்கும் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது. அதில் இரண்டு குழந்தைகளின் மகிழ்ச்சியான தருணம் என அவர் பதிவிட்டுள்ளார்.

கையில் குழந்தையுடன் அமலாபால்

ஒரு விழாவில் எடுத்த போட்டோ தான் அது. ஆனால் திடீரென அதை பார்த்த ரசிகர்களுக்கு அதுக்குள்ள குழந்தை பொறந்துருச்சா என ஒரு நிமிஷம் தலை சுற்றி தான் போய்விட்டது.

ஆனாலும் அந்த போட்டோவில் அவர் கியூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். மேலும் விரைவில் தாயாக இருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.