1. Home
  2. கோலிவுட்

வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் அமலாபாலுக்கு இப்படி ஒரு எண்ணம்மா.? வெளிப்படையாய் கூறிய அந்த விஷயம்


தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை அமலாபால். மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்த பட வாய்ப்பு வர அமலாபாலின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. அப்போதே இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து அமலாபாலின் மார்க்கெட்டும் குறைய தொடங்கியது. மேலும் ஆடை படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் அமலா பாலுக்கு சுத்தமாக பட வாய்ப்பு இல்லாமல் போனது.

தற்போது காடவர் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் படத்தை பொருத்தவரையில் நல்ல வரவேற்பு தான் பெற்றது. இந்நிலையில் பல ஊடகங்களுக்கு அமலாபால் பேட்டி கொடுத்த வருகிறார்.

அதில் தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடிக்காதற்கான காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது தெலுங்கு படங்களில் அதிகம் குடும்ப பங்கான கதைகளை இடம்பெறும். இதில் பெரும்பாலும் கமர்சியல் படங்களே இடம்பெறுவதால் ஹீரோயின்கள் பாடல் மற்றும் காதல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள்.

இதனால் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே தான் நடிக்க விரும்புகிறேன். இதற்காக தான் தெலுங்கு சினிமாவில் இருந்து நீண்ட காலமாக விலகி உள்ளேன்.

மேலும் எந்த மொழியாக இருந்தாலும் தனக்கு கதை பிடித்திருந்தால் கண்டிப்பாக அந்த படத்தில் நான் நடிப்பேன் என்ற அமலாபால் கூறியுள்ளார். தொடர்ந்து அமலாபால் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி தற்போது பிசியான நடிகையாக உள்ளார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.