1. Home
  2. கோலிவுட்

ஞானவேல் திமிருக்கு காரணமான 3 பேர்.. “கீ” கொடுத்தால் ஆட்டம் போடும் தலையாட்டி பொம்மை

ஞானவேல் திமிருக்கு காரணமான 3 பேர்.. “கீ” கொடுத்தால் ஆட்டம் போடும் தலையாட்டி பொம்மை
வட சென்னையில் வரும் ஃப்ளாஷ்பேக்கில் “தம்மா துண்டு ஆங்கர் தான் அவ்வளவு பெரிய கப்பலையே நிறுத்தது!” என்று ஒரு மாஸ் டயலாக் கூறியிருப்பார் அமீர். அது எவ்வளவு உண்மையோ அந்த அளவு பருத்திவீரன் படத்தில் அமீரின் பங்கு.

Ameer and gnanavelraja on paruthiveeran film issue: வட சென்னையில் வரும் ஃப்ளாஷ்பேக்கில் “தம்மா துண்டு ஆங்கர் தான் அவ்வளவு பெரிய கப்பலையே நிறுத்தது!” என்று ஒரு மாஸ் டயலாக் கூறியிருப்பார் அமீர். அது எவ்வளவு உண்மையோ அந்த அளவு பருத்திவீரன் படத்தில் அமீரின் பங்கு.

அமீர் இயக்கத்தில் கார்த்திக் பிரியாமணி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் பல நேர்மறையான விமர்சனங்களை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.  பருத்திவீரன் படம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்தாலும்17 வருடங்களுக்குப் பின் இப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு கருத்து வேறுபாடுகள் வந்த வண்ணம் உள்ளன.

மதுரை அன்பு எனப்படும் அன்பு செழியன் கோபுரம் சினிமாஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்துள்ளார் இவர் அமீரின் மீது என்ன காண்டில் இருந்தாரோ ஞானவேல் ராஜாவை உசுப்பேத்தி விட்டு அமீருக்கு எதிரான குற்றசாட்டுகளை அடுக்க வைத்து விட்டார் என தகவல்கள் பரவி வருகிறது.

அமீருக்கு ஆதரவாக களம் இறங்கிய கரு பழனியப்பன் இந்த விவகாரத்திற்கு பின்னால் சிவக்குமார் குடும்பம் இருப்பதாக கூறினார். பாரதிராஜா அவர்களும் ஞானவேல்ராஜாவை மன்னிப்பு கேட்கும் படி கூறினார். அமீருக்கு ஆதரவாக சமுத்திரக்கனி, சேரன், சசிகுமார் என பலரும் கொடி பிடித்த நிலையில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார்.

பிரச்சனை இவ்வளவு பூதாகரமாக ஆன பின்னும் நடிகர் சங்கமோ எதுவும் கூறாமல் அமைதி காத்து வருகிறது. சிவகுமாரின் பெயர் இந்த பிரச்சனைக்குள் வந்த பின் தான் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டார் இது போலியான வருத்தம் என்று தெரிவித்தார். தொடக்கத்தில் சூர்யா மற்றும் கார்த்தி தங்களை வளர்த்து விட்ட இயக்குனர்க்கு ஆதரவாக எந்த ஒரு கருத்தையும் கூறாதது குரு துரோகம் என சசிகுமார் சாடியுள்ளார்.

சமுத்திரகனியோ ஞானவேல் ராஜாவை, "நீங்கள் தான் பெரிய அம்பானி ஆயிடுச்சே!" அமீரீன் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று காரசாரமாக கூறினார். அடக்கி வாசிக்கும் அமீரோ பலருக்கும் பிரச்சனை ஏற்படுத்தும் என்பதால் நான் பல உண்மைகளை வெளியிடாமல் வைத்திருக்கிறேன் என்கிறார். ஆக மொத்தம் நங்கூரம் வெளிவந்தால் கப்பல் ஆட்டம் கண்டுவிடும் என்பது  நிதர்சனமான உண்மை.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.