1. Home
  2. கோலிவுட்

ரஜினி படத்தில் நடிக்க அமிதாப் வாங்கும் சம்பளம்.. விளம்பரத்துக்கே மிரள வைப்பவர் நண்பன்னா சும்மாவா.?

ரஜினி படத்தில் நடிக்க அமிதாப் வாங்கும் சம்பளம்.. விளம்பரத்துக்கே மிரள வைப்பவர் நண்பன்னா சும்மாவா.?
நண்பன் ரஜினியுடன் நடிப்பதற்காக அமிதாப் வாங்கும் சம்பளம்.

Rajini-Amitabh: ஜெயிலரை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் இப்போது தலைவர் 170 மூலம் அடுத்த அலப்பறைக்கு தயாராகி விட்டனர். கடந்த சில நாட்களாகவே லைக்கா நிறுவனம் இப்படத்தில் நடிக்கப் போகும் நட்சத்திரங்களின் லிஸ்ட்டை ஒவ்வொன்றாக வெளியிட்டு பிபியை ஏற்றிக் கொண்டிருக்கிறது.

அதன்படி பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலர் இணைந்துள்ள நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் நடிக்க இருப்பது உச்சகட்ட ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதையே மிஞ்சும் வகையில் தற்போது மற்றொரு விஷயமும் என்ன மனுஷன் பா என கேட்க வைத்துள்ளது.

அதாவது அமிதாப் ஒரு விளம்பர படத்தில் நடிக்கிறார் என்றாலே கோடிக்கணக்கில் அவருக்கு சம்பளம் கொடுக்கப்படும். அதன்படி தற்சமயம் அவர் 50 கோடி வரை ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக மட்டுமே சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறார்.

இரண்டு, மூன்று நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடிப்பதற்கே இப்படி என்றால் ஒரு படத்திற்கு எவ்வளவு வாங்குவார் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அப்படிப்பட்டவர் தன் நண்பன் படத்தில் நடிப்பதற்காக மிகவும் சொற்பமான சம்பளத்தையே வாங்கி இருக்கிறார்.

அந்த வகையில் தலைவர் 170 படத்தில் நடிப்பதற்காக இவரிடம் 20 நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்காக 15 கோடி சம்பளமும் பேசியுள்ளனர். சூப்பர் ஸ்டாருக்காகவும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் என்பதாலும் தான் அமிதாப் இவ்வளவு குறைவான சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடிக்க சம்மதித்தாராம்.

இன்று இப்படத்தின் சூட்டிங் ஆரம்பித்திருக்கும் நிலையில் விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிடவும் தயாரிப்பு தரப்பு தீவிரமாகி இருக்கிறது. அந்த வகையில் தலைவர் 170 மட்டுமல்லாமல் கமலின் கல்கி (ப்ராஜெக்ட் கே) படத்திலும் அமிதாப் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.