Actress Trisha: நடிக்க வந்து விட்டாலே ஒரு நடிகை பலவிதமான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். அதில் அட்ஜஸ்ட்மென்ட் போன்ற விஷயங்கள் இருந்தாலும் ரகசிய கேமராவுக்கு பலியாகும் நடிகைகளும் இருக்கிறார்கள். திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் கூட இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து இருக்கின்றனர்.
அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பு திரிஷா படப்பிடிப்புக்காக ஒரு ஹோட்டல் அறையில் தங்கி இருந்தபோது அவருக்கு தெரியாமல் ரகசிய கேமரா வைக்கப்பட்டு அவர் குளிக்கும் காட்சி படம் பிடிக்கப்பட்டது. அது வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ஆனால் திரிஷா இந்த விஷயத்தை மிகவும் தைரியமாகவே கையாண்டார். அதேபோன்ற ஒரு அனுபவம் தான் பிரபல நடிகைக்கும் நேர்ந்திருக்கிறது. கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை கிருத்தி கர்பந்தா தமிழில் ப்ரூஸ் லீ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த அப்படம் எதிர்பார்த்த அளவு போகாததால் கிருத்தி கர்பந்தா தற்போது வேறு மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் தனக்கு நடந்த கசப்பான இந்த அனுபவம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அதாவது அவர் ஒரு கன்னட பட சூட்டிங் சென்றபோது ஒரு ஹோட்டலில் தங்கி இருக்கிறார். அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர் செட்-டாப் பாக்ஸ் பின்னால் திருட்டுத்தனமாக ரகசிய கேமரா ஒன்றை பொருத்தி இருக்கிறார். இதை கிருத்தி படப்பிடிப்பு குழுவின் உதவியோடு கண்டுபிடித்திருக்கிறார்.
எப்போதுமே வெளியிடங்களில் தங்கும் போது இது போன்ற முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் அவர் நடக்க இருந்த விபரீதத்திலிருந்து தப்பித்திருக்கிறார். இதை தற்போது வெளிப்படையாக கூறியிருக்கும் அவர் இந்த சம்பவத்தால் தான் மிகவும் பயந்து விட்டதாகவும் கூறியுள்ளார். அந்த வகையில் திரிஷா போல் இவர் பெரும் ஆபத்தில் சிக்கினாலும் அதிலிருந்து எஸ்கேப் ஆனது குறிப்பிடத்தக்கது.