ரஜினியின் நடிப்பில் இப்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து அவர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் நடிக்க இருக்கிறார். ஜெய் பீம் புகழ் ஞானவேல் இயக்கும் இந்த திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்து எதிர்பார்ப்பை கிளப்பியது.
இந்நிலையில் ரஜினி அல்வா கொடுத்த ஒரு இளம் இயக்குனரை கமல் அரவணைத்துள்ளார். அதாவது ஜெயிலர் திரைப்படம் முடிந்தவுடன் அடுத்த படத்திற்காக ரஜினி, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட பல இளம் இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் தேசிங்கு பெரியசாமி தான் ரஜினியை இயக்குவார் என்ற செய்திகள் வெளிவந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் சூப்பர் ஸ்டார் இவரை கழட்டி விட்டு ஞானவேல் சொன்ன கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். எப்படியும் ரஜினியை இயக்கி விடலாம் என்று கனவு கண்டிருந்த தேசிங்கு பெரியசாமி இதனால் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தார். அது மட்டுமல்லாமல் அவருடைய நேரமும் வீணானது தான் மிச்சம். அதன் பிறகு தான் கமல் தன் நிறுவனத்தின் மூலம் அவருக்கு சிம்புவை வைத்து இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.
அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இதை கவனித்த ரஜினி தற்போது கமல் மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறாராம். ஆரம்ப காலகட்டத்தில் இந்த இரு பெரும் நடிகர்களுக்கு இடையே எந்த அளவுக்கு போட்டி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இடையில் இவர்களுக்குள் அதுபோன்ற எந்த போட்டி மனப்பான்மையும் இல்லாமல் அனைத்தும் சுமூகமாகவே சென்றது.
மேலும் அவரவர்களுக்கான வழியில் இருவரும் பயணித்தனர். அதெல்லாம் ஒரு காலகட்டம் வரை தான். ஏனென்றால் கடந்த வருடம் கமல் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் கொஞ்சம் ஜெர்க் ஆகியது உண்மைதான். திடீரென தன் நண்பன் போட்டிக்கு வருவார் என்று அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். அதனாலேயே தற்போது அவர் மிகப்பெரிய ஹிட்டை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
இப்படி இந்த இரண்டு நடிகர்களுக்கு இடையே ஈகோ தலை தூக்கி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த வகையில் நம்பர் ஒன் இடத்திற்கு போட்டி போடும் நடிகர்கள் எல்லாம் ஓரமா போய் வேடிக்கை பாருங்க என்பது போல் இருக்கிறது இந்த விவகாரம். மேலும் ரஜினி கமல் இருவருக்கும் இடையே நடக்கும் இந்த மறைமுக பனிப்போர் திரையுலக வட்டாரத்தில் கடும் அதிர்வலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.