1. Home
  2. கோலிவுட்

லால் சலாம் ஓடிடி ரிலீஸ் எப்போது.? வெளியான அப்டேட், வழக்கம் போல பில்டப் மட்டும் தானா

லால் சலாம் ஓடிடி ரிலீஸ் எப்போது.? வெளியான அப்டேட், வழக்கம் போல பில்டப் மட்டும் தானா

Lal Salaam OTT Update: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் கடந்த வருட தொடக்கத்தில் வெளியானது.

சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதனாலயே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல் தயாரிப்பு தரப்பும் ஏகப்பட்ட பில்டப் கொடுத்தது.

ஆனால் படம் வெளியான பிறகு பார்த்தால் கொடுத்த அலப்பறைக்கு ஒர்த் இல்லை. வந்த சுவடு தெரியாமல் தியேட்டரை விட்டு ஓடியது.

அதேபோல் ஐஸ்வர்யாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். உடனே அவர் ஹார்ட் டிஸ்க் தொலைஞ்சு போச்சு என சின்ன பிள்ளை போல் காரணம் சொன்னார்.

லால் சலாம் ஓடிடி ரிலீஸ் எப்போது.?

அதை அடுத்து படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ஒரு வருடம் கடந்த பிறகும் கூட படம் டிஜிட்டலுக்கு வரவில்லை.

இன்னுமா ஹார்ட் டிஸ்க் கிடைக்கல என இணையவாசிகள் இதை பங்கம் செய்தனர். இந்நிலையில் படத்தின் ஓடிடி அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது வரும் ஏப்ரல் 4ம் தேதி படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகும் என பேசப்படுகிறது. ஆனால் இது உண்மையா வழக்கம் போல பில்டப் தானா என தெரியவில்லை.

அப்படி படம் வெளியாகும் பட்சத்தில் சில புது காட்சிகள் இணைக்கப்பட்டு ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என தெரிகிறது. எதுவாக இருந்தாலும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.