விஜய்யை மிஞ்சிய அண்ணாச்சி.. இதில் இப்படி ஒரு ஒற்றுமையா?
தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்த அண்ணாச்சி தற்போது தனது அடுத்தடுத்த பட வேலையை தொடங்க உள்ளார். அதாவது சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் அண்ணாச்சிக்கு ஹீரோவாக வேண்டும் என்பது பல வருட கனவாக இருந்துள்ளது.
ஆனால் 50 வயதை கடந்து தான் தி லெஜன்ட் படத்தின் மூலம் அண்ணாச்சி ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். இதனால் அவரது தோற்றத்தை இளமையாக வைத்துக் கொள்ள பல முயற்சிகள் செய்து வருகிறார். எப்போதுமே முகத்துக்கு அதிக மேக்கப் போட்டிருப்பார்.
தி லெஜண்ட் படம் வெளியான போதே இந்த விமர்சனங்கள் எழுந்தது. அதுமட்டுமின்றி அண்ணாச்சி தலையில் விக்கும் பயன்படுத்தி வருகிறார். அவரது வயதை குறைத்துக் காட்டுவதற்காக இது போன்ற சில விஷயங்களை செய்து வருகிறார்.
சமீபகாலமாக தளபதி விஜய்யும் படங்களில் விக் பயன்படுத்தி வருகிறார். பீஸ்ட் படத்திற்காக சன் டிவியில் ஒரு நேர்காணலின் விஜய் பங்கு பெற்றார். இந்நிகழ்ச்சியை அப்படத்தின் இயக்குனர் நெல்சன் தொகுத்து வழங்கினார். அப்போது விஜய் ஆடாமல் அசையாமல் சிலை போல் இருந்தார்.
அப்போதே தளபதி விஜய் விக் வைத்திருக்கிறார் என்று இணையத்தில் கலாய்த்து வந்தார்கள். மேலும் வெளியில் செல்லும்போது ஒரு விதமான விக் படப்பிடிப்புக்கு செல்லும்போது விக் என மாற்றி மாற்றி விஜய் பயன்படுத்துவது அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது விஜய்க்கு டப் கொடுக்கும் வகையில் அண்ணாச்சி புதிய வீக் ஒன்று பயன்படுத்தி உள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த பலரும் இது நம்ப அண்ணாச்சியா என வியந்து பார்க்கிறார்கள்.
