Ilaiyaraaja : தமிழ் சினிமா உலகம் எதை விட்டாலும் இளையராஜாவின் இசையை விடாது. 80ஸ், 90ஸ் காலத்தில் இருந்து இன்று வரையிலும் இளையராஜா இசை தான் மக்களின் மனதை வருடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு வயதானாலும் அவருடைய இசை பயணத்திற்கு இன்னும் வயதாகவில்லை
தனது இசை திறமையை கையில் வைத்து தமிழ் சினிமா உலகையே ஆட்டிப்படைத்து வருகிறார் இளையராஜா. அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தனது பாடல் பயன்படுத்தப்பட்டதாக கூறி இளையராஜா காப்புரிமை வழக்கில் ஐந்து கோடி கேட்டு வழக்கு பதிவு செய்தார்.
அதேபோல் வனிதா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தில் இடம் பெற்ற ” சிவராத்திரி தூக்கம் போச்சு” என்ற பாடல் பயன்படுத்தப்பட்டதுக்கு வழக்கு தொடர்ந்தார் இளையராஜா. இந்த விஷயங்கள் சினிமா உலகையே உலுக்கியது.
இப்படி 2k காலத்தில் கூட பயன்படுத்தும் அளவிற்கு இளையராஜாவின் பாடல் இன்றும் மக்களை ஈர்க்கப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை. தன்னுடைய பாடலை யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் இளையராஜாவின் வேண்டுகோளாகவே இருக்கிறது
சினிமாவில் பேமஸ் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது இளையராஜாவை பற்றி பகிர்ந்துள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ” 82 வயதிலும் இளையராஜா அவர்கள் இசையில் கலக்கிக் கொண்டிருப்பது பெரிய விஷயம்.
இசை என்பது சும்மா இல்லை ரொம்ப நேரம் நின்று கொண்டே இருக்க வேண்டும். என்னுடைய வயதிலேயே அது சாத்தியம் கிடையாது. ஆனால் இளையராஜா சார் இந்த வயதிலும், மனதில் உற்சாகத்தை வைத்துக் கொண்டு இசை அமைப்பது பெரிய விஷயம். இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார்- ஹாரிஸ் ஜெயராஜ்“.