2 வருடம் கழித்து தரமான என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. மீண்டும் தேவசேனா போல் மிரட்ட வராங்க!

ரஜினி, விஜய், அஜித், சூர்யா என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் அனுஷ்கா. ஆரம்பத்தில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்து தனது கேரியரை தொலைத்து விட்டார். ஏனென்றால் அந்தப் படத்திற்காக உடம்பை அதிகபடியாக ஏற்றி இருந்தார்.

அதன்பின்பு உடலை குறைக்க முடியாமல் படாத பாடு பட்டுவிட்டார். பிறகு தான் பாகுபலி படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. இந்த படத்தில் இவரது தேவசேனா கதாபாத்திரம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற கதாபாத்திரத்திற்காக அனுஷ்கா காத்திருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழில் சைலன்ஸ் மற்றும் தெலுங்கில் நிசப்தம் படம் அனுஷ்கா நடிப்பில் வெளியாகியிருந்தது. அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் பிரேக் எடுத்தார். இப்போது இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில் அனுஷ்கா என்ட்ரி கொடுத்துள்ளார்.

தரமான என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா

anushka-shetty
anushka-shetty

அந்த வகையில் நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பாலிஷெட்டி என்பது அனுஷ்காவின் 48வது படத்தின் டைட்டில் ஆகும். மேலும் இந்த படம் தெலுங்கில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரம் அவ்விதம் ரவளி ஷெட்டி என்பதாகும். மேலும் கடந்த இரண்டு வருடங்களாக அனுஷ்கா இது போன்ற கதாபாத்திரத்திற்காக காத்திருந்ததாக அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது. பாகுபலி படத்தை போல் இந்தப் படமும் மிகப்பெரிய பெயரை வாங்கி தரும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

மேலும் மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பாலிஷெட்டி படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டைட்டிலை வைத்து பார்க்கும் போது குடும்ப செண்டிமெண்ட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுஷ்கா மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.