1. Home
  2. கோலிவுட்

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன அருண் விஜய்.. வணங்கான் படப்பிடிப்பில் லீக்கான புகைப்படம்

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன அருண் விஜய்..  வணங்கான் படப்பிடிப்பில் லீக்கான புகைப்படம்
வணங்கான் படப்பிடிப்பு தளத்திலிருந்து அருண் விஜய்யின் கெட்டப் என்ன என்பதை வெளிப்படுத்தும் புகைப்படம் லீக் ஆகி உள்ளது.

கடைசியாக அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான யானை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்தப் படம் ஏற்கனவே சூர்யா நடிக்க வேண்டிய அருவா படம் தான் என்றும் சொல்லப்பட்டது.

அதன் பிறகு பாலா இயக்கி சூர்யா நடித்த வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையிலும், படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. ஏனென்றால் இந்த படத்தின் கதையில் ஒரு சில மாற்றத்தை பாலா செய்ததால், அதற்கு சூர்யா செட் ஆக மாட்டார் என்று படம் ட்ராப் ஆனதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட அருண் விஜய், வணங்கான் படத்தில் தற்போது சூர்யாவுக்கு பதிலாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் அருண் விஜய் ஆளே அடையாளம் தெரியாமல் கிராமத்து லுக்கில் கம்பீரமாக நடந்து வருகிறார். மேலும் சூர்யா கைவிட்ட வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் வந்தால் அருண் விஜய் பெரிய நட்சத்திரம் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

பல வருடங்களாக சினிமாவில் டாப் ஹீரோவாக மாறத் துடித்துக் கொண்டிருக்கும் அருண் விஜய்யின் சினிமா கெரியரில் வணங்கான் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என பாலா ஸ்டிட் கண்டிஷன் போட்ட நிலையில் இந்த புகைப்படம் எப்படி லீக் ஆனது என குழப்பத்தில் இருக்கிறார்.

வணங்கான் படத்தில் அருண் விஜய்யின் லுக்

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன அருண் விஜய்..  வணங்கான் படப்பிடிப்பில் லீக்கான புகைப்படம்
arun-vijay-cinemapettai
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.