1. Home
  2. கோலிவுட்

ஓவர் பர்ஃபெக்ஷன் பார்க்கும் அஜித்.. ஏகேவை ஓரம்கட்டி விட்டு பிரபல நடிகரை லாக் செய்த லைகா

ஓவர் பர்ஃபெக்ஷன் பார்க்கும் அஜித்.. ஏகேவை ஓரம்கட்டி விட்டு பிரபல நடிகரை லாக் செய்த லைகா
அஜித்தால் ஏகே 62 படம் தாமதம் ஆவதால் வேறு ஒரு பிரபல நடிகரின் படத்தை லைக்கா தயாரிக்க உள்ளது.

ஏகே 62 படத்தில் மகிழ்திருமேனி, லைக்கா கூட்டணி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை இன்னும் லைக்கா அறிவிக்காமல் இருக்கிறது. இதற்கு ஒரு வகையில் அஜித் தான் காரணம் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் இன்று நாளை என்று இழுத்தடித்து வருகிறாராம்.

அதுமட்டுமின்றி ஏகே 62 படத்திற்காக அஜித் நிறைய கண்டிஷன் போட்டுள்ளதால் இதை சமாளிக்க முடியுமா என்ற குழப்பத்தில் மகிழ்திருமேனி உள்ளாராம். இந்நிலையில் லைக்கா தமிழ் சினிமாவில் நிறைய படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.

ஏனென்றால் பொன்னியின் செல்வன் படம் நல்ல லாபத்தை கொடுத்த நிலையில் பெரிய நடிகர்களின் கால்ஷீட் எல்லாம் லைக்கா வாங்கிக் கொண்டிருக்கிறதாம். தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் படங்கள் நல்ல வசூல் செய்யும் என்பதால் இவ்வாறு செயல்பட்ட வருகிறது.

இப்போது அஜித் ஏகே 62 படத்தில் ஓவர் பர்ஃபெக்ஷன் பார்த்து வருவதால் லைக்கா வேறு முடிவு எடுத்துள்ளது. அதாவது அஜித் படத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் அதற்குள் சூப்பர் ஸ்டார் படத்தை முடித்து விடலாம் என்ற திட்டத்தில் லைக்கா உள்ளதாம். ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற த செ ஞானவேல் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்க உள்ளார்.

இப்போது அவர் ரஜினிக்கான கதையை தயார் செய்து கொண்டிருக்கிறாராம். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்‌ஷன் தான் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. மேலும் ஏகே 62 படத்திற்கு முன்னதாகவே ரஜினி படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது. ஏனென்றால் ஜெயிலர் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

ஆகையால் அடுத்ததாக ரஜினி, ஞானவேல் படத்தில் உடனடியாக நடிக்க இருக்கிறார். இதனால் அஜித்தின் படம் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது. விஜய்யின் லியோ படத்திற்கு போட்டியாக ஏகே 62 படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அஜித்தால் தற்போது இந்த படம் தள்ளிப் போவது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.