துக்கம் தொண்டையை அடைக்க அளவுக்கு ட்ரோல் பண்ணினா எப்படி.? வேதனையில் தூங்குமூஞ்சி அஸ்வின்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பெரியளவில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் தான் நடிகர் அஷ்வின். இவர் பட வாய்ப்புக்காக பல அவமானங்கள் மற்றும் கஷ்டங்களை சந்தித்துள்ளார். ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் செகண்ட் ஹீரோ நண்பன் போன்ற கேரக்டர்களில் கூட நடித்துள்ளார்.

இப்படி இருந்த சூழலில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் ஆல்பம் பாடல்கள் என அடுத்தடுத்து அவரின் வளர்ச்சி உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அடுத்த கட்டமாக என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி தற்போது அந்த படமும் வெளியாகி விட்டது. ஆனால் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அஷ்வின் கொஞ்சம் ஆணவமாக பேசியதால் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தனர்.

அதனை தொடர்ந்து சில நாட்கள் சோசியல் மீடியாவில் டிரோல் மெட்டீரியலாகவே அஷ்வின் மாறிவிட்டார். அவருக்கு ஸ்லீப்பிங் ஸ்டார் என்ற பட்டமும் கொடுத்து விட்டார்கள். இந்நிலையில் சமீபத்தில் என்ன சொல்ல போகிறாய் படக்குழுவினர் ஃபேன்ஸ் மீட் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்நிகழ்ச்சியில் அஷ்வின் அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மாறு வேடத்தில் வந்து சமோசா வழங்கி சர்ப்ரைஸ் அளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானது தான் தாமதம் நெட்டிசன்கள் இவரை வச்சு செய்ய தொடங்கி விட்டார்கள். அஸ்வினை பார்த்து சொன்னால்தான் மாதிரி ட்ரை பண்றீங்களா என்று துக்கம் தொண்டையை அடைக்க அளவுக்கு ரோல் செய்து வருகின்றனர்.

ashwin
ashwin

அதாவது ஏற்கனவே ரொனால்டோ இதேபோல் ரசிகர்களை சந்திப்பதற்கு மாறுவேடத்தில் சென்று பலமுறை ஆச்சரியப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரி மட்டமான ஐடியாவை யார் கொடுத்தார் என்பதை நெட்டிசன்கள் தேடி வருகின்றனர். இதனால் தற்போது அஷ்வின் உச்சக்கட்ட மனவேதனையில் இருக்கிறாராம். மேலும் என்ன பண்ணாலும் டிரோல் செய்வதால் மிகவும் டென்சனில் இருக்கும் அஷ்வின் இனிமேல் என்ன பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும் என அவரது நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கூறியுள்ளாராம்.