1. Home
  2. கோலிவுட்

விஜய்க்கு அடுத்த பட கதை சொன்ன அட்லீ.. ஆகா, இது அந்த படமல என உஷாரான தளபதி

விஜய்க்கு அடுத்த பட கதை சொன்ன அட்லீ.. ஆகா, இது அந்த படமல என உஷாரான தளபதி
அட்லியின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு வேறு ஹீரோ தேர்வாகி இருக்கிறார்.

Atlee Upcoming Project: இயக்குனர் அட்லி ஜவான் திரைப்படத்தின் மூலம் மீண்டும் கமர்சியல் இயக்குனராக ஜெயித்திருக்கிறார். தமிழில் இதுவரை விஜய்யை மட்டுமே வைத்து படம் இயக்கி ஹிட் கொடுத்த அவருக்கு பாலிவுட் என்ட்ரி, கை கொடுத்து இருக்கிறது. ஜவான் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக அட்லி இப்போது அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த படத்தின் வசூலும் 600 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்குப் பிறகு அட்லி அடுத்தடுத்து பாலிவுட் படங்களை இயக்குவார் என சொல்லப்பட்டது. அதேபோன்று இந்த படத்தின் வேலைகள் முடிந்த பிறகு தன்னுடைய ஆஸ்தான ஹீரோவான தளபதி விஜய் உடன் தான் அடுத்த படம் எனவும் பேசப்பட்டது. ஆனால் தற்போது அட்லியின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு வேறு ஹீரோ தேர்வாகி இருக்கிறார்.

விஜய்க்கு ஒரு கதை அவுட்லைன் சொல்லி ஏற்கனவே ஓகே வாங்கி இருந்தார் அட்லீ. ஜவான் ரிலீஸ் ஆனபின் விஜய்க்கு முழு கதை சொல்லி இருக்கிறார். இந்த படம் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று விஜய்க்கு சந்தேகம் வந்துவிட்டது. அதனால் முழு கதையில் விஜய்க்கு திருப்தி இல்லையாம். அதனால் கொஞ்ச நாள் போகட்டும் என்று தள்ளி போட்டுவிட்டாராம் விஜய். அதனால் அட்லி தெலுங்கு பக்கம் இந்த கதையை கொண்டு போய் உள்ளார்.

அங்கு அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி இருவரும் கதை விவாதத்தில் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஜவான் படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் அட்லியுடன் இணைவதை பற்றி முடிவெடுப்பதாக சொல்லி இருந்ததாகவும், தற்போது அந்த கதைக்கு ஓகே சொல்லி இருப்பதாகவும் தெரிகிறது.

தெலுங்கில் உருவாகி பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆன புஷ்பா படம் அல்லு அர்ஜுனை இந்திய சினிமா ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தியது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த பிறகு அட்லீயுடன் இணையும் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லியை பொறுத்த வரைக்கும் அவர் மீது பல நெகட்டிவ் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவருடைய அடுத்த கட்ட வளர்ச்சி என்பது எப்போதுமே மற்றவர்களை வாயை பிளக்க செய்யும் விதமாகத்தான் இருக்கிறது. சமீபத்திய ரிலீஸ் ஆன ஜவான் படமும் கலவை விமர்சனங்களை பெற்றாலும் இவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி டோலிவூட்டில் தனது என்ட்ரியை கொடுக்க இருக்கிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.