1. Home
  2. கோலிவுட்

ஜவான் கட்டி விட்ட சலங்கை.. சம்பளத்தை உயர்த்தி ஆடாத ஆட்டம் ஆடும் அட்லி

ஜவான் கட்டி விட்ட சலங்கை.. சம்பளத்தை உயர்த்தி ஆடாத ஆட்டம் ஆடும் அட்லி
இப்படிப்பட்ட காரணங்களால் தான் அட்லி தன் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.

Jawan-Atlee: சும்மாவே நாங்க ஆடுவோம், இதுல சலங்கை வேற கட்டிவிட்டால் சொல்லவா வேணும். அப்படி ஒரு நிலைமையில் தான் அட்லி இருக்கிறார். ஏற்கனவே இவர் ஓவர் அலும்பு செய்து கொண்டு தான் திரிவார். இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரை வேறு இயக்கியிருக்கிறார்.

அப்படி என்றால் இவருடைய ஆட்டம் எப்படி இருக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த வகையில் ஜவான் படத்தை இயக்கி முடித்துள்ள அட்லி தன்னுடைய சம்பளத்தையும் ராக்கெட் வேகத்திற்கு உயர்த்தி விட்டாராம். இதுதான் இப்போது திரை உலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுவரை 30 கோடி வாங்கி வந்த அட்லி தற்போது 55 கோடி வரை தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அந்த அளவுக்கு ஜவான் படத்தின் மேல் அவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறாராம். இருந்தாலும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவர் இந்த அளவுக்கு கெத்து காட்டி கொண்டிருப்பது கொஞ்சம் ஓவர் தான் என பலரும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத அட்லி அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் இயக்குவதற்காக ஒரு பெரிய அமௌண்ட்டையும் அட்வான்ஸ் ஆக வாங்கி விட்டாராம். போகிற போக்கை பார்த்தால் அட்லியை தங்கள் படங்களில் புக் செய்ய வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் பண மூட்டைகளை தான் கொண்டு செல்ல வேண்டும் போலிருக்கிறது.

அந்த அளவுக்கு இவர் ரொம்பவும் தெனாவட்டாக இருக்கிறாராம். வரும் செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கும் ஜவான் பாலிவுட்டில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் விஜய் சேதுபதி, நயன்தாரா போன்ற பிரபலங்கள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

அதனாலேயே இப்படம் ஆயிரம் கோடியை தாண்டி வசூலிக்கும் என்று பாலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட காரணங்களால் தான் அட்லி தன் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் இயக்கிய தெறி படம் ஹிந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. அதை தயாரிக்கும் அட்லி இதன் மூலம் மிகப்பெரிய அளவில் கல்லா கட்டவும் திட்டம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.