மனோபாலா மரணத்தில் சர்ச்சையை கிளப்பிய பயில்வான்.. அதிர்ச்சியில் உறைய வைத்த பழக்கம்

சினிமா பிரபலங்களின் அடுத்தடுத்த மரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி வரும் நிலையில் மனோபாலாவின் மரணம் பேரதிர்ச்சியாக இருந்தது. சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என தனது பன்முகத்திறமையை மனோபாலா காட்டியுள்ளார்.

இவருடைய இறப்புக்கு திரைத்துறையைச் சார்ந்த பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தளபதி விஜய் நேரில் வந்து மனோபாலாவின் பூத உடலுக்கு மரியாதை செலுத்தி சென்றார். மேலும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் தான் மனோபாலாவின் கடைசி படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் சினிமாவில் நடிகர், நடிகையின் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப்பில் பேசி பிரபலமான பயில்வான் ரங்கநாதன் மனோபாலாவின் மரணம் குறித்து பேசி உள்ளார். அதாவது ரஜினி, கமல், மோகன் போன்ற பல பெரிய நடிகர்களின் படங்களை மனோபாலா இயக்கியுள்ளார். மேலும் சினிமாவில் அவருடைய பங்களிப்பும் பெரியது.

ஆனால் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் மனோபாலா பலரிடம் வாய்ப்பு கேட்டு வந்தார். இப்போதுதான் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் மனோபாலா இறந்துவிட்டதாகவும், அவர் இறந்ததற்கான காரணத்தையும் கூறிரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

அதாவது மனோபாலாவுக்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மதுப்பழக்கம் இருந்ததாக பயில்வான் கூறியுள்ளார். அளவுக்கு அதிகமாக அவர் தொடர்ந்து மது அருந்தியதின் காரணமாக கல்லீரல் பாதிக்கப்பட்டது. இதற்கான சிகிச்சையும் மனோபாலா மேற்கொண்டு வந்த நிலையில் பயனளிக்காமல் உயிரிழந்து விட்டார் என பயில்வான் கூறியுள்ளார்.

ஆனால் மனோபாலாவின் மகன் கூறுகையில், தனது தந்தைக்கு சில நாட்களாகவே உடல் நலத்தில் பிரச்சனை இருந்ததாகவும், அதற்கான சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறினார். மேலும் சமீபத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை மேற்கொண்டோம். அந்தச் சமயத்தில் பிசியோதெரபி கொடுத்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக தந்தை உயிரிழந்ததாக கூறியிருக்கிறார்.