ரஜினி கர்நாடகா பக்கம் வரக்கூடாது.. நீ இங்க வந்தா நாக்க அறுப்போம், சீறிப்பாய்ந்த பயில்வான்

Rajini-Bayilvan Ranganathan: பயில்வான் ரங்கநாதன் அவ்வப்போது தேவையில்லாத விஷயங்களை பேசி யாரிடமாவது நன்றாக வாங்கி கட்டிக் கொள்வார். ஆனால் இப்போது ரஜினிக்கு ஆதரவாக அவர் பேசியிருப்பது ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

அதாவது கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் வருடக்கணக்காக பிரச்சனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் தற்போது வழக்கம் போல காவிரி நீர் திறப்பு விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. அதன் விசாரணையில் தமிழ்நாட்டுக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது.

அதை நிறுத்த வேண்டும் என்று வட்டாள் நாகராஜ் புது ஏழரையை கூட்டியது மட்டுமல்லாமல் ரஜினியையும் வம்புக்கு இழுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் அவரை கர்நாடகா பக்கமே வரக்கூடாது என்று அவர் கூறியது ஒட்டு மொத்த ரசிகர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

அதை தொடர்ந்து பயில்வான் ஆக்ரோஷமாக தன் கருத்தை வெளியிட்டு இருப்பது தான் வைரலாகி வருகிறது. அவர் கூறியிருப்பதாவது, ரஜினி பிறந்ததே கர்நாடகாவில் தான். அவருக்கு அங்கு ஏகப்பட்ட சொத்து இருக்கிறது. அவருடைய அண்ணன் கூட அங்கு தான் இருக்கிறார்.

அப்படிப்பட்டவரை கர்நாடகா பக்கம் வரக்கூடாதுன்னு சொல்வதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கு. தைரியம் இருந்தால் தமிழ்நாட்டு பக்கம் வந்து பாரு, நாங்க உன் நாக்கை அறுத்து விடுவோம் என்று காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார். ஆனால் அவரை பலரும் தேவையில்லாமல் விமர்சித்து வருகிறீர்கள். இது இப்படியே தொடர்ந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவருடைய இந்த பேச்சு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.