பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து ஏராளமான விருதுகளை பெற்றுள்ள பாலா இன்று முன்னணி இயக்குனர் அந்தஸ்தில் இருக்கிறார். அதனாலேயே இவருடைய படத்தில் நடிப்பதற்கு பல பிரபலங்களும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் ஒரு ஹீரோயின் மட்டும் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம்.
அதாவது பாலா இப்போது வணங்கான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சூர்யாவின் நடிப்பில் உருவாகி வந்த இப்படம் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக தடைப்பட்டு நின்றது. அதை தொடர்ந்து இவருக்கும் பாலாவுக்கும் பிரச்சினை என்ற செய்திகளும் பரப்பரப்பை கிளப்பியது.
அதற்கேற்றார் போல் சூர்யாவும் இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது ஏகப்பட்ட விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பியது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத தற்போது பாலா, அருண் விஜய்யை வைத்து வணங்கான் படப்பிடிப்பை ஜோராக நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு இப்போது கீர்த்தி செட்டி மறுத்து விட்டாராம். ஏற்கனவே சூர்யா நடிக்கும் போது இவர்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தார். ஆனால் இவருக்கும் படப்பிடிப்பில் ஏகப்பட்ட அசௌகரியங்கள் இருந்திருக்கிறது. இருப்பினும் அமைதியாக நடித்து வந்த இவர் சூர்யா விலகியவுடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று எஸ்கேப் ஆகிவிட்டார்.
அதைத்தொடர்ந்து இப்போது தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் இவருக்கு பாலா மீண்டும் வலை வீசி உள்ளார். ஏனென்றால் சூர்யாவுடன் தானே பிரச்சனை ஹீரோயின் உடன் இல்லையே என்ற எண்ணத்தில் தான் பாலா, கீர்த்தி செட்டியை அணுகி இருக்கிறார். ஆனால் அதற்கான பலன் தான் இப்போது கிடைக்கவில்லை.
அந்த வகையில் கீர்த்திக்கு நெருக்கமான வட்டாரங்கள் மீண்டும் மாட்டிக்கொள்ளாதே, சுதாரித்துக் கொள் என்று அறிவுரை கூறியிருக்கின்றனர். அதன் காரணமாக அவர் பாலாவிடம் டேட் இல்லை என பல காரணங்களை சொல்லி எஸ்கேப் ஆகி இருக்கிறார். சம்பளம் அதிகமாக கொடுக்கிறோம் என்று கூறியும் கூட அவர் மறுத்து விட்டாராம். அதனால் பாலா இப்போது வேறு ஹீரோயினை தேடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.