சூடு பிடிக்கும் பாலாஜி முருகதாஸின் ஃபயர்.. மொத்த கலெக்ஷன் இவ்வளவா.!
Fire: ஜே சதீஷ்குமார் தயாரித்து இயக்கியிருந்த ஃபயர் கடந்த 14ஆம் தேதி வெளியானது. பாலாஜி முருகதாஸ், ரட்சிதா மகாலட்சுமி, சாந்தினி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
டாக்டர் காசி பெண்களை ஏமாற்றிய உண்மை சம்பவம் தான் இப்படம். ஒரு விழிப்புணர்வாக எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது.
அதிகப்படியான கிளாமர் காட்சிகள் முகம் சுளிக்க வைத்திருந்தாலும் தற்போது படத்திற்கு ஆடியன்ஸ் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்து வருகின்றனர்.
சூடு பிடிக்கும் பாலாஜி முருகதாஸின் ஃபயர்
அதன்படி சென்னையில் முதல் நாளில் 16 திரைகளில் மட்டுமே படம் திரையிடப்பட்டது. ஆனால் இப்போது அது 60 ஸ்கிரீன்களாக அதிகரித்துள்ளது.
அதேபோல் இப்படம் தற்போது வரை 70 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இன்னும் சில தினங்களில் ஒரு கோடியை நெருங்கிவிடும் என்கின்றனர்.
மேலும் படத்தின் ஹீரோ பாலாஜி தியேட்டரில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையும் அவர்களுடன் நடந்த சந்திப்பையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அது மட்டும் இன்றி தற்போது ஸ்கிரீன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதையும் அவர் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளார். ஆக மொத்தம் ஃபயர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இந்த வாரமும் வரவேற்பு இருக்குமா என பார்ப்போம்.
