1. Home
  2. கோலிவுட்

பிக் பாஸ் அல்டிமேட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்.. ஓவர் நைட்டில் ட்ரெண்டாகும் ஸ்ருதி

பிக் பாஸ் அல்டிமேட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்.. ஓவர் நைட்டில் ட்ரெண்டாகும் ஸ்ருதி

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதனால் போட்டியாளர்கள் டைட்டிலை பெறுவதற்காக ஒருவருக்கொருவர் கடுமையாக போட்டி போட்டு ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். எப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குகிறது என்றால் போட்டியாளர்களுக்கு ஒரு பணப்பெட்டி ஆபர் கொடுக்கப்படும். அதில் கொடுக்கப்படும் தொகை தங்களுக்கு வேண்டும் என்று நினைக்கும் போட்டியாளர்கள் அதை எடுத்துக்கொண்டு போட்டியை விட்டு பாதியிலேயே வெளியேறலாம். அதன்படி நேற்று பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்பட்டது. ஆனால் போட்டியாளர்கள் யாரும் அந்த பணப் பெட்டியை எடுக்க முன்வரவில்லை. பின்னர் அதில் இருக்கும் பணத்தின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டது. அதனால் ஜூலி அந்த பணத்தை எடுக்கலாம் என்ற யோசனையில் இருந்தார். அதேபோன்று ஸ்ருதியும் பணத்தை எடுக்கும் ஆர்வத்துடன் இருந்தார். இன்று அந்த பணப்பெட்டியின் மதிப்பு 9 லட்சமாக உயர்ந்தது. இதனால் ஜூலி அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே இருப்பதாக கூறினார். உடனே ஸ்ருதி நானும் பணத்தை எடுக்கும் முடிவில் இருக்கிறேன் என்று தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் ஜூலி மற்றும் ஸ்ருதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் சுருதி, ஜூலியிடம் உனக்கு என்ன தேவைகள் இருக்கு என்று கேட்டார். அதற்கு ஜூலி என்னுடைய தேவை என்னுடைய வீடு தான் என்று கூறினார். அதற்குச் ஸ்ருதி எனக்கு வீடே கிடையாது அதனால் நான் பெட்டியை எடுத்துக் கொள்கிறேன் என்றார். இப்படியே அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க ஒரு கட்டத்தில் ஸ்ருதி நான் பணப் பெட்டியை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி வேகமாக சென்று அந்தப் பணப் பெட்டியை கையில் எடுத்துக் கொண்டார். இதை வைத்து பார்க்கும் பொழுது ஸ்ருதி ஒன்பது லட்சம் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற தயாராகி விட்டார் என்று தெரிகிறது. அவரின் இந்த புத்திசாலித்தனமான முடிவை தற்போது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பலரும் ஸ்ருதிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருவதால் அவர் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறார்.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.