ராமாயணம், மகாபாரதத்திற்கு போன ரெட்ரோ.. வச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்

Retro : சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வாயிலிருந்து தப்பிய படங்கள் என்றால் விரல் விட்டு என்னும் அளவுக்குத்தான் இருக்கும். இப்படி இருக்கும் நிலையில் நேற்றைய தினம் வெளியான ரெட்ரோ படத்தை வறுத்தெடுத்து இருக்கிறார்.

அதாவது ஜோஜு ஜார்ஜ் தூத்துக்குடியில் பெரிய ரவுடியாக இருந்து வருகிறார். அவருக்கு வாரிசு இல்லாத நிலையில் அவரது மனைவி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார். இது ரவுடிக்கு பிடிக்கவில்லை என்றாலும் தனது பாதுகாப்புக்காக வைத்துக் கொள்கிறார்.

வளர்ப்பு அப்பா வழியில் மகனும் ரவுடியாகிறார். பூஜா மீது காதலில் விழுகிறார் சூர்யா. ரவுடித்தனத்தை விட்டால் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று பூஜா சொல்கிறார். இதனால் எல்லாத்தையும் விட்டுட்டு சூர்யா திருமணம் செய்து கொள்ளும் நிலையில் அவரது தந்தை பிரச்சனை செய்கிறார்.

ரெட்ரோ படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

பூஜாவை ஜோஜு கொலை செய்ய முயற்சித்த போது பிரச்சனை வெடிக்கிறது. இதிலிருந்து கதை ராமாயணம், மகாபாரதம் என எங்கெங்கயோ செல்கிறது. தூத்துக்குடியில் ஆரம்பித்து அமெரிக்கா, அந்தமான் என்று பல இடங்களுக்கு செல்கிறது.

விடாமுயற்சி படுமோசமாக வெளியானது. அதன் பிறகு குட் பேட் அக்லி படம் வெளியான போது விடாமுயற்சியே பரவாயில்லை என்று சொல்லப்பட்டது. அதேபோல் தான் கங்குவா எவ்வளவோ நல்ல படம் என்று சொல்லும் அளவுக்கு இப்போது ரெட்ரோ வெளியாகி இருக்கிறது.

உங்களுக்கு வேற ஏதாவது வேலை இருந்த போய் பாருங்க என்று ப்ளு சட்டை மாறன் நக்கல் அடித்துள்ளார். அவர் சொல்வதும் சரிதான் என்று சொல்லும் அளவுக்கு ரெட்ரோ படத்திற்கு கலமையான விமர்சனங்கள் தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.