1. Home
  2. கோலிவுட்

கமலை வைத்து விஜய்யை வம்பு இழுத்த ப்ளூ சட்டை.. கிண்டல் அடித்து போட்ட பதிவு

கமலை வைத்து விஜய்யை வம்பு இழுத்த ப்ளூ சட்டை.. கிண்டல் அடித்து போட்ட பதிவு

Vijay: நேற்றைய தினம் ட்விட்டர் தளத்தை மையம் கொண்டது தளபதி 69 குறித்து கேவிஎன் ப்ரொடக்ஷன் வெளியிட்ட வீடியோ தான். விஜய் இன்னும் ஒரு முறை தான் திரையில் தோன்ற இருக்கிறார் என்பதை குறிப்பிடும் வகையில் அந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது.

அவருடைய ஆரம்பகால சினிமா பயணம் தொடங்கி தற்போது வரை உள்ள புகைப்படங்களை தொகுத்து வீடியோவில் வைக்கப்பட்டது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் மிகுந்த மன வேதனையில் தள்ளப்பட்டனர். கடைசியாக தளபதி 69 இல் மட்டும் தான் விஜய் தோன்றுவார் என்பது அவர்களுக்கு வேதனை அளித்தது.

ஆனாலும் மற்றொருபுறம் அரசியலில் அவர் வரப்போகிறது மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யை விமர்சிக்கும்படி ஒரு ட்வீட் செய்து இருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு

கமலை வைத்து விஜய்யை வம்பு இழுத்த ப்ளூ சட்டை.. கிண்டல் அடித்து போட்ட பதிவு
blue-sattai-maran

அதாவது கமல் சில வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியிருந்தார். அவரும் அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் நடிக்க போவதில்லை என்று அறிவிப்பு விடுத்திருந்தார். ஆனால் கமல் நினைத்தது போல் அரசியலில் அவரால் ஜெயிக்க முடியவில்லை.

அதன் பிறகு தான் கொடுத்த வாக்கில் இருந்து பின் வாங்கி மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விட்டார். அதன் பிறகு அவர் நடித்த விக்ரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் இப்போது பல படங்களில் கமிட் செய்து நடித்து வருகிறார்.

தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இளம் நடிகர்களின் படங்களையும் தயாரித்து வருகிறார். இதை விஜய்யோட ஒப்பிட்டு ப்ளூ சட்டை பதிவு போட்டிருக்கிறார். இதற்கு விஜய் ரசிகர்கள் கமல் போல் விஜய் கிடையாது, அரசியலில் ஜெயித்தாலும், தோற்றாலும் அவர் சினிமாவுக்கு திரும்ப வரமாட்டார் என்று கூறி வருகின்றனர். ஏனென்றால் கொடுத்த வாக்கில் இருந்து விஜய் எப்போதுமே பின் வாங்க மாட்டார் என்பது அவர்களது நிலைப்பாடு.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.