1. Home
  2. கோலிவுட்

சின்ன தளபதி SK, அப்ப சின்ன SK இவரா.? கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன்

சின்ன தளபதி SK, அப்ப சின்ன SK இவரா.? கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன்

Blue Sattai Maran: கோட் படம் வந்ததிலிருந்து ஏகப்பட்ட பாசிட்டிவ் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை எல்லாம் தாண்டி ஒரே ஒரு விஷயம் தான் இப்போது தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதாவது கடந்த சில மாதங்களாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்ற பேச்சு இருந்தது. ஆனால் அவர் அரசியலுக்காக சினிமாவுக்கு குட்பை சொல்ல போகிறேன் என தெரிவித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

உடனே அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என அவரின் ரசிகர்கள் பத்த வைத்தனர். அந்த நெருப்பு கோட் படம் வரை வந்துவிட்டது. அதாவது இப்படத்தில் அவர் ஒரு சிறு காட்சியில் நடித்திருக்கிறார்.

அதுதான் இப்போது இந்த அளப்பறைகளுக்கு காரணமாக இருக்கிறது. அதாவது அதில் விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்து பார்த்துக் கொள்ள செல்வார். உடனே அவரும் இதைவிட நீங்கள் ஏதோ முக்கியமான வேலையா போறீங்க நான் பார்த்துக்கிறேன் என சொல்வார்.

சின்ன சிவகார்த்திகேயன் கவின்

உடனே ரசிகர்கள் கோலிவுட்டை சிவா கையில் தளபதி கொடுத்துவிட்டார் என ஆரம்பித்தனர். இதை ப்ளூ சட்டை மாறனும் தற்போது பங்கம் செய்துள்ளார். அதாவது சின்ன தளபதி SK-ன்னா அப்ப சின்ன SK யாரு? வேற யாரு கவின் தான் என குறும்பாக மீம்ஸ் போட்டுள்ளார்.

சின்ன தளபதி SK, அப்ப சின்ன SK இவரா.? கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன்
blue sattai maran

ஏனென்றால் கவின் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்ததுமே சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்க ஒரு ஆள் வந்துவிட்டார் என பேசப்பட்டது. ஆனால் கவின் இதை தொடர்ந்து மறுத்து வந்தார்.

உண்மை அதுதான் என நிரூபிக்கும் பொருட்டு தற்போது சிவகார்த்திகேயனின் அமரன் கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் இரண்டு படங்களும் தீபாவளிக்கு மோதுகிறது. இதிலிருந்து இவர்களின் போட்டி ஆரம்பித்துவிட்டது என தெரிகிறது. அதைத்தான் ப்ளூ சட்டை மாறன் நாசுக்காக கொளுத்தி போட்டுள்ளார்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.