1. Home
  2. கோலிவுட்

விஜய், கமலால் லோகேஷுக்கு பிடித்த மனநோய்.. உளவியல் சோதனைக்கு பாய்ந்த வழக்கு

விஜய், கமலால் லோகேஷுக்கு பிடித்த மனநோய்.. உளவியல் சோதனைக்கு பாய்ந்த வழக்கு
லோகேஷுக்கு எதிராக போடப்பட்டிருக்கும் வழக்கு.

Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் இப்போது தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்கள் விரும்பும் இயக்குனராக இருந்து வருகிறார். அவரது கால்ஷீட் கிடைக்காதா என பல டாப் ஹீரோக்கள் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் இப்போது எதிர்பாராத விதமாக லோகேஷ் மீது ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.

அதாவது பொதுவாகவே லோகேஷின் படங்களை எடுத்துக் கொண்டால் அதிகம் வன்முறை மற்றும் போதை பொருள் சம்பந்தமான காட்சிகள் இடம்பெறுவது தற்போது வரை வழக்கமாக இருந்து வருகிறது. அதுவும் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ஏகப்பட்ட வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

அதை காட்டிலும் சமீபத்தில் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம் பெற்றது. இந்நிலையில் மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ராஜு முருகன் லோகேஷ் மீது மனு தாக்கல் செய்திருக்கிறார். வன்முறையை தூண்டும் விதமாக லோகேஷ் தொடர்ந்து படங்கள் எடுத்து வருகிறார்.

இதனால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ராஜா முருகன் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிமன்றத்தில் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஹீரோக்களுக்கு மாஸ் படங்களை கொடுக்க வேண்டும் என்று லோகேஷ் ரசிகர்களே பார்க்க உச்சப்படும் பயங்கரமான காட்சிகளை கூட படங்களில் தொடர்ந்து வைத்து வருகிறார். இப்போது அதன் விளைவாக இந்த வழக்கு லோகேஷ் மீது போடப்பட்டிருக்கிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.