1. Home
  2. கோலிவுட்

மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார்கள்.. ஜெயலர் 2வில் இறங்கும் பிரபலம்

மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார்கள்.. ஜெயலர் 2வில் இறங்கும் பிரபலம்

Rajini : ரஜினி வேட்டையன் படத்திற்கு பிறகு இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.

இதனால் எல்லா மொழிகளிலும் பிரபலமான பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்நிலையில் கூலி படத்தில் நடித்த பிரபலம் இப்போது ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க இருக்கிறார்.

அதாவது ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெரீஃப் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் நல்ல வசூலை வாரி கொடுத்தது. இதையடுத்து சன் பிக்சர்ஸ் ஜெயிலர் 2 படத்தை இப்போது தயாரித்து வருகிறது. 

ஜெயிலர் 2 வில் நடிக்கும் பிரபலம்

இதில் நாகர்ஜுனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாம். ரஜினியுடன் இப்போது தான் கூலி படத்தில் நாகார்ஜுனா நடித்திருந்தார். அவர் நடித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இதை அடுத்து லோகேஷ் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதாவது பலரது கடின உழைப்பால் படம் உருவாகி வருகிறது. அதை சில நொடிகளில் இணையத்தில் வெளியிட்டு எல்லோருடைய உழைப்பும் வீணாக போய்விடுகிறது என்று கூறியிருந்தார். 

மேலும் கூலி படத்தில் வில்லனாக நாகர்ஜுனா நடிப்பதாக கூறப்பட்டது. இப்போது சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆகையால் இரண்டு சூப்பர் ஸ்டாரர்களும் ஜெயிலர் 2 படத்தில் சம்பவம் செய்யப் போகிறார்கள்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.