காங்குவாவை போல் கூலியை காலி செய்து விடாதீர்கள்.. பிரபலம் போட்ட பதிவு

Coolie : சூர்யாவின் கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியை சந்தித்தது. அதேபோல் இப்போது கூலி படத்தை செய்து விடாதீர்கள் என பிரபலம் ட்வீட் செய்துள்ளார்.

எப்போதுமே ரஜினியை சீண்டும்படி பேசும் ப்ளூ சட்டை மாறன் அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சூர்யாவின் ரெட்ரோ படத்தைக் காட்டிலும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வசூலை தாண்டியது.

இதை படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தியேட்டர் ஓனர் ஸ்ரீதர் கூறியிருந்தார். ஆனால் சாட்டிலைட், ஓடிடி என பலவற்றில் வணிக ரீதியாக லாபத்தை பெற்றதாக தனஜெயன் உருட்டி வருவதாக ப்ளூ சட்டை கூறி இருக்கிறார்.

கூலி படத்தை காலி செய்ய வேண்டாம் என்று கூறிய பிரபலம்

blue-sattai-maran
blue-sattai-maran

மேலும் தியேட்டரில் இந்த படம் ஊத்திக்கொண்டது என்பது ஊரறிந்த உண்மை. இதை ஒற்றுக்கொள்ள மறுப்பது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா. ஒரு தரமற்ற பொருளை இன்னொருவரிடம் லாபத்திற்கு விற்றுவிட்டு, தயாரிப்பாளர் தப்பிவிட்டார் என பெருமைப்படுவது ஏமாற்று வேலை தான்.

பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை புட்டு புட்டு வைப்பதில் நீங்கள் தான் கோமகன். போலியான வெற்றி கதைகளை சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள். இதை நம்ப யாரும் தயாராக இல்லை. இப்படி பேசிப்பேசி தான் கங்குவா படத்தை காலி செய்தீர்கள்.

அதேபோல் கூலி படத்தையும் செய்து விடாதீர்கள். கடந்த சில மாதங்களாகவே கூலி படம் ஆயிரம் கோடி அடிக்குமா என்ற தலைப்பில் பேசி வருகிறார்கள். இப்படி சொல்லித் தலைவரை காலி செய்து விடாதீர்கள் என ப்ளூ சட்டை பதிவிட்டுள்ளார்.

ஜெயிலர் படம் வெளியானதில் இருந்து ரஜினியை விமர்சித்து பதிவு போட்ட ப்ளூ சட்டை மாறன் முதல் முறையாக அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.