1. Home
  2. கோலிவுட்

திவாகரனை மாதிரி நடிக்கிறாரே.. சூர்யாவை தாக்கி வரும் விமர்சனங்கள்!

திவாகரனை மாதிரி நடிக்கிறாரே.. சூர்யாவை தாக்கி வரும் விமர்சனங்கள்!

Suriya : சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கருப்பு படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கண்டிப்பாக சூர்யாவுக்கு ஒரு தரமான ஹிட் படத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

இந்த சூழலில் ஒருபுறம் சூர்யாவை தாக்கி விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சி இடம்பெறும். அதை அப்படியே ரீ கிரியேட் செய்து கருப்பு படத்தில் வைத்திருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. அந்த காட்சியும் டீசரில் இடம் பெற்றிருந்தது.

இதுதான் இப்போது இணையத்தில் பேசுபொருளாக இருக்கிறது. வாட்டர் மெலன் மேன் என்று அழைக்கப்படும் திவாகர் உடன் சூர்யாவை ஒப்பிட்டு பிரபல ஊடகம் பதிவு போட்டிருக்கிறது. அதோடு இருவரின் புகைப்படத்தை இணைத்து உங்களின் கருத்து என்ன என்று கேட்டிருக்கின்றனர்.

சூர்யாவை திவாகருடன் ஒப்பிட்டு விமர்சனம்

திவாகரனை மாதிரி நடிக்கிறாரே.. சூர்யாவை தாக்கி வரும் விமர்சனங்கள்!
suriya

இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்திருக்கின்றனர். முதலில் அந்த பதிவை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அதாவது சூர்யா பல படங்கள் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்து ஒரு முன்னணி இடத்தில் இருக்கிறார்.

அவருடன் சும்மா விளம்பரத்திற்காக தியேட்டர் வாசலில் நின்று கூவும் திவாகர் உடன் எப்படி ஒப்பிடுவது. யாருமே ஒரு சேனலை கண்டுகொள்ளவில்லை என்பதற்காக பலரின் கவனத்தைப் பெற இப்படி கண்டதை எல்லாம் போடலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்‌.

இதற்கெல்லாம் காரணம் தியேட்டர் வாசலில் நின்று இது போன்ற மோசமான விமர்சனங்களை எடுத்து காசு பார்க்கிறவர்களை தான் சொல்ல வேண்டும். சூர்யாவுடன் திவாகரை ஒப்பிட்டு வெளியான புகைப்படத்திற்கு பலரும் இவ்வாறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.