கமலை திட்டிக்கொண்டே இருந்த டேனியல் பாலாஜி.. ஆண்டவரை பிடிக்காமல் போன காரணம்
Actor Daniel Balaji: கடந்த சில தினங்களுக்கு முன்பு டேனியல் பாலாஜி மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். 48 வயதில் அவருடைய இழப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும் கலங்கடித்துள்ளது. அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவர் குறித்த பல விஷயங்களும் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவருடைய மிரட்டும் நடிப்பை பிரபலங்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் இவருக்கு காக்க காக்க, பொல்லாதவன் போன்ற பல படங்கள் திருப்புமுனைகளாக இருந்திருக்கிறது. ஆனால் ஆண்டவரையே மிரட்டிய அமுதன் கேரக்டர் தான் இப்போதும் பேசப்பட்டு வருகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு படத்தில் டேனியல் பாலாஜி முக்கிய வில்லனாக நடித்திருந்தார். சைக்கோ டாக்டராக தொடர் கொலைகளை செய்யும் இவருடைய கேரக்டர் படு மிரட்டலாக இருக்கும்.
