Ajith Kumar: விஜய் சினிமாவை காலி பண்ணும் நேரத்தில் அஜித் பயங்கரமான சம்பவம் பண்ண இருக்கிறார். ஏற்கனவே அவர் நடித்த குட் பேட் அக்லி படம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் தான் இறங்கி அடிப்பது என்ற முடிவை எடுத்துவிட்டார் போல. ஏற்கனவே அஜித்தை வைத்து படத்தை இயக்க தனுஷ் காத்துக்கொண்டிருக்கிறார்.
சம்பவம் பண்ண காத்திருக்கும் அஜித்
திரைக்கதை பற்றிய விவாதமும் நடந்து விட்டது என சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் தான் தற்போதைய சென்சேஷனல் இயக்குனர் லோகேஷ் கனகராஜை அஜித் சந்தித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜின் பட குழு நெதர்லாந்து சென்றிருந்த சமயத்தில் அஜித்தை தற்செயலாக சந்திக்க நேரிட்டிருக்கிறது. இருவரும் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் படத்தில் இணைவது குறித்தும் பேசி இருக்கிறார்கள்.
விரைவில் அஜித்துக்கு கதை ரெடி பண்ணிவிட்டு லோகேஷ் கனகராஜ் கதை விவாதம் நடத்த இருப்பதாகவும் தெரிகிறது. தனுஷை லோகேஷ் கனகராஜ் முந்துகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.