1. Home
  2. கோலிவுட்

பட்டினி கிடந்த கதையெல்லாம் இப்போ எதுக்கு.. எதிரிகளுக்கு நடுவில் மாட்டிக்கொண்ட தனுஷ்

பட்டினி கிடந்த கதையெல்லாம் இப்போ எதுக்கு.. எதிரிகளுக்கு நடுவில் மாட்டிக்கொண்ட தனுஷ்

Dhanush : தனுஷ் நடிப்பில் வெளிவந்த குபேரா படம் வெற்றிவாகை சூடியதை அடுத்து, குபேரா பட குழுவினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். குபேரா பட நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் பேசிய பேச்சு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அதனின் தாக்கம் இன்று வரையில் குறையவில்லை என்றுதான் கூறவேண்டும்.

எத்தனை விமர்சனம் என்றாலும் அதை காதில் வாங்காமல் முன்னேறுவது தனுஷ் அவர்கள் ஸ்டைல் என்றே கூறலாம். குபேரா பட நிகழ்ச்சியில் தனுஷ், தான் கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்தை அடைந்தேன் என்பதை அவரது பாணியில் கூறினார். அது ஒருசில பேருக்கு ஏற்றுக்கொள்ள கூடியதாகவும், ஒருசில பேருக்கு ஓவர் பில்டப் என்றும் கூறி வந்தனர்.

இந்தவகையில் வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் தனுஷ்-யை பற்றி ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனுஷ் குபேரா பட ப்ரோமோஷனலில் பேசியது அவரது ஆதங்கம் வெளிப்பட்டிருக்கிறது என்றும். நிறைய எதிரிகளுக்கு மத்தியில் தனுஷ் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் அவரை கவிழ்ப்பதற்காக ஒரு கூட்டமே சுற்றுகிறது என்றும் இவர் கூறியுள்ளார்.

இதேயெல்லாத்தையும் தாண்டி எந்த ஒரு நடிகருக்கும் விவாகரத்து ஆனால் அதற்கும் தனுஷ் தான் காரணம் என்றும் ஒரு வதந்திகளை பரப்பி தனுஷை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர் என்றும் கூறியுள்ளார். சிம்பு ரசிகர்கள் ஒருபக்கம் தனுஷை தாக்க தற்போது சிவகார்த்திகேயனின் இளம்ரசிகர்கள் ஒரு பக்கம் தனுஷை சோசியல் மீடியாவில் வறுத்தெடுக்கின்றனர் எனவும் பேசியுள்ளார்.

இப்போ எதுக்கு பட்டினி கிடந்த கதையெல்லாம்...

தனுஷ் அவர்கள் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் பையன் என்பதால் அவர் கஷ்டங்கள் படவில்லை சொகுசாக வளர்ந்தார் என்று அர்த்தம் இல்லை. அவர் நடுத்தரமான வாழ்க்கையை வாழ்ந்தவர். கஸ்தூரி ராஜா அவர்களுக்கு ஒரு சில படங்கள் கைகொடுக்கும் ஒரு சில படங்கள் காலி செய்து விடும் எனவே அனைத்திற்கும் கஷ்டப்பட்ட குடும்பம்தான். அப்போது பட்டினி கிடந்த காலமெல்லாம் உண்டு.

ஆனால் தற்போது நடிகர் தனுஷ் நன்றாகத்தான் உள்ளார். அவர் முதல் படம் ஹிட்டான போது சொல்லவேண்டியதெல்லாம் தற்போது, போதும் போதும் என்றளவிற்கு பணம் இருக்கிறது, மேலும் புகழின் உச்சத்தில் உள்ளார் இப்போது பட்டினி கிடந்த கதையெல்லாம் சொல்ல வேண்டிய தேவையில்லை. மேலும் இந்த பேச்சு தேவையற்றது எனவும் வலைப்பேச்சு பிஸ்மி அவரது பெட்டியில் கூறியுள்ளார்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.