தனுஷ் இப்போது தொடர் தோல்வி படங்களை கொடுத்து மிகுந்த மன கஷ்டத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என முழு நம்பிக்கையில் தனுஷ் உள்ளார்.
இந்நிலையில் தனுஷ் தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட் படத்தை வாங்க துடித்துக் கொண்டிருக்கிறார். அதாவது தனுஷ் வுண்டர் பார் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சில படங்களை தயாரித்து உள்ளார். இப்போது அந்த நிறுவனத்தில் புதிய படம் ஒன்று தயாரிக்க இருக்கிறார்.
அதாவது சமீபத்தில் மலையாளத்தில் 2018 என்ற படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கேரளா மாநிலத்தில் 2018 ஏற்பட்ட வெள்ள பெருக்கினை அப்படியே கண் முன் காட்டி இருந்தது. அனைத்து கதாபாத்திரங்களையும் இயக்குனர் சரியாக பயன்படுத்தி இருந்தார்.
இப்படம் வெளியாகி சில நாட்களிலேயே கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தொடர்ந்து இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது 2018 படத்தை வாங்க அனைத்து மாநிலங்களிலும் போட்டி போட்டுக்கொண்டு உள்ளனர். தமிழ்நாட்டில் தனுஷ் இந்த படத்தை வாங்க மும்மரம் காட்டி வருகிறார்.
மேலும் தமிழ்நாட்டில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையாக மாற்றி அவரே நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனுஷை தவிர மற்ற இரண்டு மூன்று ஹீரோக்களையும் நடிக்க வைக்கும் திட்டத்தில் உள்ளாராம். இந்த படத்தை தமிழில் எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்று தனுஷ் முயற்சி செய்து வருகிறார்.
அதுமட்டுமின்றி தனது தயாரிப்பு நிறுவனத்தை மீண்டும் தொடங்குவதில் தனுஷ் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளாராம். அதிலும் 2018 படத்தின் மூலம் இதைத் தொடங்க உள்ளார். இதற்கு அடுத்தபடியாக மாரி செல்வராஜ், தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தையும் வுண்டர் பார் பிலிம்ஸ் தான் தயாரிக்க இருக்கிறது.