ஊருக்கு மட்டும்தான் உபதேசமாம்.. அண்ணனுக்கு உதவாமல் டீலில் விட்ட தனுஷ்
அண்ணன் பட்ட கஷ்டத்தில் பங்கு பெறாமல் ஜம்பமாக பேசும் நடிகர் தனுஷ்.
தனுஷ் மிகக் குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். சாதாரணமாக தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என்ன அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார். இப்போது தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தனுஷ் மேடையில் பல வசனங்களை அள்ளித் தெளிப்பார். அது ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டலையும் பெரும். அப்படிதான் சமீபத்தில் ஒரு மேடையில் நட்பை பற்றி கூறியிருந்தார். அதாவது திருச்சிற்றம்பலம் படத்தின் ப்ரோமோஷனில் நண்பனுக்கு கஷ்டம் என்றால் செயினை கழட்டி கொடுத்தால் அதுதான் மாஸ் என்று பேசி இருந்தார். ஆனால் இது எல்லாம் மேடைப் பேச்சுக்கு மட்டும் தானா என தனுஷை சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் அவருடைய அண்ணன் செல்வராகவன் தான். ஏனென்றால் ஆரம்பத்தில் தனுஷுக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்து ஒரு நடிகனாக செதுக்கியது அவர்தான். அதுமட்டுமின்றி தனுஷுக்கு பல வெற்றி படங்களை செல்வராகவன் கொடுத்துள்ளார். இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். இப்போது இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும் படம் வெளியான சமயத்தில் பெரிய அளவில் பேசப்படவில்லை. இதனால் ஆயிரத்தில் ஒருவன் படம் போட்ட வசூலை எடுக்க முடியாமல் நஷ்டத்தை சந்தித்தது. ஆகையால் செல்வராகவனுக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதன் விளைவாக இந்த படத்தின் நஷ்டத்தில் 40% செல்வராகவன் ஏற்றுக் கொண்டார். இதில் பட்ட கடனால் செல்வராகவன் பல இன்னலுக்கு உள்ளாகி உள்ளார். சமீபத்தில் தான் அந்த முழு கடனையும் அடைத்ததாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார். ஊருக்கு மட்டும் உபதேசம் என்பது போல, தனக்கு வாழ்க்கை தந்து உதவிய அண்ணனுக்கே உதவாத தனுஷ் மேடையில் மட்டும் ஜம்பமாக நண்பனுக்கு செயினை கழட்டி தருவேன் என்று பேசியது சிரிப்பை வர வைப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசுகின்றனர்.
