மோசமான மன நிலையில் தனுஷ்.. காசு, பணம் இருந்தும் சூட்டிங் ஸ்பாட்டில் காட்டும் ஓவர் ஆட்டிட்யூட்

Actor Dhanush: இன்றைய தமிழ் சினிமா ஹீரோக்களில் தற்போதைய நிலவரப்படி பயங்கர பிசியாக இருக்கும் நடிகர் தனுஷ் தான். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு இவர் கைவசம் படங்கள் குவிந்து கிடக்கின்றன. பட வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு கோடிக்கணக்கில் சம்பாதித்து, சொத்துக்களையும் ஒரு பக்கம் குவித்து வருகிறார். படங்களின் வெற்றிக்கு ஏற்றது போல் இவருக்கு சம்பளமும் ஏறிக் கொண்டே போகிறது.

தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி என பிறமொழி படங்களிலும் அடுத்தடுத்து அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கும் தனுஷுக்கு, அடுத்த ரிலீசுக்காக காத்திருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார். கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி இந்த படத்தை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டு இருக்கிறது.

எளிமையான நிலையிலிருந்து சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற தனுஷுக்கு, சொந்த வாழ்க்கை தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. தான் காதலித்து திருமணம் செய்த மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை இவர் கடந்த வருடம் விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்கள்.

விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனுஷ் இது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை, நான் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்பது போல் பொதுவெளியில் காட்டிக்கொண்டாலும் இவருடைய ஆட்டிட்யூட் மொத்தமாக மாறிப் போய் இருப்பதாக படப்பிடிப்பு தளங்களில் பலரும் கவனித்து சொல்லி வருகிறார்கள். காரணம் அவருடைய போயஸ் கார்டன் வீடு தானாம்.

ரஜினியை விட பெரிய வீட்டை போயஸ் கார்டனில் கட்டி விட வேண்டும் என ஆசைப்பட்ட தனுஷ் அதை செய்தும் காட்டிவிட்டார். ஆனால் அந்த வீடு அவருக்கு ராசி இல்லையாம். கோடிக்கணக்கில் கொட்டி கட்டிய வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கிறாராம். இதற்கு அந்த வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் இல்லாததே காரணம் என்கிறார்கள்.

என்னதான் பெயரும் புகழும் இருந்தாலும், கோடிக்கணக்கில் காசு சம்பாதித்தாலும் வீட்டில் குடும்பமாக இல்லாமல் தனியாக இருப்பது தான் தனுஷ் மனநிலை மோசமானதற்கு காரணம். இதை படப்பிடிப்பு தளங்களில் கோபமாகவும், ஆட்டிட்யூட் காட்டுவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார் இவர்.