கேப்டன் மில்லருக்கு பின் போலீசாக மிரட்டும் தனுஷ்.. அஜித்தின் அஸ்தான இயக்குனர் தயார் செய்த உண்மை கதை
பல்வேறு கெடப்பில் நடித்திருக்கும் தனுஷ் முதன் முதலாக அஜித்தின் அஸ்தான இயக்குனருடன் போலீஸ் கெட்டப்பில் மிரட்டப் போகிறார்.
தனுஷின் நடிப்பில் வாத்தி திரைப்படம் உருவாகி இருக்கிறது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் இப்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த திரைப்படம் பிரிட்டிஷ் கால படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்குப் பிறகு தனுஷ் அடுத்த படத்தில் போலீஸ் கெட்டப்பில் களம் இறங்குகிறார். அஜித்தின் துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீசானதை தொடர்ந்து, தனுஷ் படத்தை அஜித்தின் அஸ்தான இயக்குனர் ஹெச் வினோத் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கதையையும் வினோத் தயார் செய்து வைத்திருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் முதன்முதலாக தனுஷ் போலீஸ் அதிகாரியாக நடிப்பது ரசிகர்களிடம் இந்த படத்தை குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தற்போது தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முடித்துவிட்டு. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை டிசம்பரில் துவங்கி இருக்கிறார். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு முதல் முதலாக இணையும் தனுஷ்-ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு துவங்கப் போகிறது. எனவே பயங்கர பிசியாக இருக்கும் தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட்டாகி கொண்டு இருக்கிறார். இவர் தெலுங்கு ப்ரொடியூசர் ஒருவரின் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். அத்துடன் மதுரை அன்பு செழியன்க்கு ஒரு படம் பண்ணுகிறார். பின் சன் பிக்சர் உடன் ஒரு படம் பண்ணுகிறார். லலித்துக்கும் ஒரு படம் பண்ணுகிறார். இந்த வரிசையில் ஹெச் வினோத் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் அனல் பறக்கும் அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. மேலும் தனுஷை விதவிதமான கெட்டப்பில் பார்த்த ரசிகர்களுக்கு முதன் முதலாக போலீசாக பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
