1. Home
  2. கோலிவுட்

4 டாப் ஹீரோக்களுடன் இயக்கிய நடிக்கப் போகும் தனுஷ்.. மரண மாஸாக வெளிவந்த அடுத்த பட டைட்டில்

4 டாப் ஹீரோக்களுடன் இயக்கிய நடிக்கப் போகும் தனுஷ்.. மரண மாஸாக வெளிவந்த அடுத்த பட டைட்டில்
தனுஷ் நான்கு முன்னணி ஹீரோக்களுடன் இயக்கிய நடிக்கப் போகும் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என வெரைட்டியாக வெளுத்து வாங்கி கொண்டிருக்கும் தனுஷின் வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் தெலுங்கில் சார் என்ற டைட்டிலில் வெளியாகிறது.

இதன் பிறகு தனுஷ் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழிகளில், சுதந்திரப் போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்தை பிரதிபலிக்கும் படமான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தனுஷ் தற்போது நான்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பதுடன் அந்தப் படத்தை அவரே இயக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு, எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தனுஷும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்திற்கு 'ராயன்' என பெயரிட்டுள்ளனர். டைட்டிலே செம மாஸாக இருப்பதுடன் படத்தில் 4 முன்னணி பிரபலங்களும் இணைந்து இருப்பதால் தனுஷின் இந்த புது முயற்சி தற்போது ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கான கதை தயாராக இருக்கும் நிலையில் படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுகிறதாம். கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க போகின்றனர். சமீப காலமாகவே தனுஷின் படங்கள் தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்காமல் போவதால் வித்தியாசத்தை காட்ட வேண்டும் என தனுஷ் அவருடைய படத்தை அவரே இயக்கி மாஸ் காட்டப் போகிறார்.

மேலும் தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்தில் கமிட் ஆகி, அதற்கான பூஜையுடன் படப்பிடிப்பையும் துவங்கி உள்ளனர். எனவே இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் எடுத்து முடிக்கும் எண்ணத்தில் தனுஷ் இருக்கிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.