குஷ்பூ போல் எடை குறைத்த தனுஷ் பட நடிகை.. ஒரே வருஷத்துல இப்படி ஸ்லிம் ஆகிட்டாங்க!

Dhanush : ஒல்லியான தேகத்தில் உள்ளவர்கள் தான் கதாநாயகிகளாக நடிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதை புரட்டி போட்டதே நடிகை குஷ்பு தான். ஆனால் அவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது உடல் எடையை குறைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

அதேபோல் பல பிரபலங்கள் உடல் எடையை குறைத்து வருகிறார்கள். அவ்வாறு தனுஷ் பட நடிகை உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

மாரி செல்வராஜின் கர்ணன் படத்தில் நடித்தவர் தான் ரஜிஷா விஜயன். இவர் சூர்யாவின் ஜெய் பீம் படத்திலும் நடித்திருந்தார்.

இப்போது கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தில் நடிக்கிறார். அதோடு மாரி செல்வராஜின் மற்றொரு படமான பைசன் படத்திலும் நடித்திருக்கிறார்.

15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன்

rajisha-vijayan
rajisha-vijayan

இந்த படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார்.ரஜிஷா விஜயன் உடல் பருமன் அதிகமாக இருப்பதாக நினைத்த நிலையில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஒரு வருடமாக தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம் மூலம் 15 கிலோ எடை குறைத்திருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இப்போது தனது கோச்சுடன் உடல் பருமனாக இருக்கும் புகைப்படம் மற்றும் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். ரஜிஷா விஜயனுக்கு 33 வயது ஆகிறது. மேலும் உடல் எடை குறைத்த பிறகு அவருக்கு பட வாய்ப்பு அதிகம் வர வாய்ப்புள்ளது.