1. Home
  2. கோலிவுட்

கவின் வெற்றிபெற்ற இயக்குனரை லாக் செய்த துருவ்.. விக்ரம் போடும் வசூல் கணக்கு பலிக்குமா

கவின் வெற்றிபெற்ற  இயக்குனரை லாக் செய்த துருவ்.. விக்ரம் போடும் வசூல் கணக்கு பலிக்குமா
ஆரம்பத்திலேயே ஏற்பட்ட பிரச்சனையால் தான் என்னவோ துருவ் விக்ரம் எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் இருக்கிறார்.

இன்றைய இளம் தலைமுறை வாரிசு நடிகர்களில் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் துருவ் விக்ரம். இதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய அப்பா சீயான் விக்ரம் தான். விக்ரமுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஏராளம். எனவே அவருடைய மகன் சினிமாவுக்குள் நுழைகிறார் என்பதை ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்றனர். அதற்கு ஏற்றார் போல் துருவ் பார்ப்பதற்கும் அப்படியே விக்ரம் போலவே அமைந்து விட்டதால் அது அவருக்கு பாசிட்டிவ் ஆகவே இருந்தது.

மகனை எப்படியாவது சினிமாவில் வளர்த்து விட வேண்டும் என்று நினைத்து விக்ரம், தன்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய இயக்குனர் பாலா இயக்கத்தில் துருவை முதலில் நடிக்க வைத்தார். ஆனால் அந்த படம் அவருக்கு திருப்தி அளிக்காததால், அதே கதையை வேறு ஒரு இயக்குனரை வைத்து எடுத்து ரிலீஸ் செய்தார். மகனின் வெற்றிக்காக தன்னுடைய குருவையே எதிர்த்தவர் தான் நடிகர் விக்ரம்.

ஆனால் ஆரம்பத்திலேயே ஏற்பட்ட பிரச்சனையால் தான் என்னவோ துருவ் விக்ரம் எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் இருக்கிறார். நல்ல நடிப்பு திறமை இருந்தும், முதல் படம் வெற்றி பெற்றும் அவரால் தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. இருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். துருவ் தற்போது மாரி செல்வராஜின் படத்தில் நடிப்பதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்.

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் இந்த படம் கபடி போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இதனால் தற்போது துருவ் தென் மாவட்டங்களில் கபடி விளையாட கற்றுக் கொண்டிருக்கிறார். ஒரு படத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும்போதே, அவருக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பாக மற்றொரு இயக்குனரிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.

நடிகர் கவினுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இயக்குனர் கணேஷ் கே பாபு தான் தற்போது துருவ் விக்ரமை இயக்க இருப்பது. கவின் முன்னதாகவே தமிழில் படங்கள் நடித்திருந்தாலும், அவருடைய வாழ்க்கையை மாற்றியது டாடா திரைப்படம் தான். அந்த படத்திற்கு பிறகு தான் கவினுக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய அடையாளம் கிடைத்திருக்கிறது. உலக நாயகன் கமலஹாசன் கூட அவரை நேரில் அழைத்து பாராட்டினார்.

தற்போது துருவ் விக்ரமை வைத்து கணேஷ் கே பாபு படம் இயக்க இருப்பது ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை விக்ரமுக்கு கொடுத்திருக்கிறது ஏற்கனவே மாரி செல்வராஜுடன் ஒப்பந்தமான படம் பாதியிலே நின்று விட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மிகப்பெரிய வெற்றி இயக்குனருடன் இவர் இணைய இருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.