அதுக்கும் மேலேன்னு 6 அடி மாஸ்டர் பீஸ்ஸை வளைத்த மகிழ் திருமேனி.. மொத்தமாய் விடாமுயற்சி ஊதிய சங்கு

பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுப்பது ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் கனவாகும். அப்படி மகிழ் திருமேனிக்கு வந்த வாய்ப்பு தான்  விடாமுயற்சி படம். தடையறத் தாக்க, மீகாமான், தடம் போன்ற படங்களில் தன்னுடைய முத்திரையை பதித்த மகிலுக்கு அஜித் வாய்ப்பு கொடுத்தார்.

 கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த படத்தை வச்சு செய்தார் மகிழ் திருமேனி. பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த படம் இந்த ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியானது. துணிவு படத்திற்குப் பிறகு சுமார் இரண்டு வருடங்கள் கழித்து அஜித்திற்கு விடாமுயற்சி வந்தது.

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் மோசமான பிளாப் லிஸ்டில் சேர்ந்தது. நாம் அஜித்தை வைத்து இயக்குகின்ற படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் என மனக்கோட்டை கட்டி வந்த மகிலுக்கு இந்த படத்தின் தோல்வி பெரிய ஷாக்காக அமைந்தது .

 இந்த படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது அடுத்த கட்டத்துக்கு விதை போட்டு விட வேண்டும் என விடா முயற்சி இயக்கும் நேரத்திலேயே பாலிவுட் சென்று ஆறடி மாஸ்டர் பீஸ் நடிகரான அமிதாப்பச்சனுக்கு ஒரு ஒன் லைன் ஸ்டோரியும் சொல்லி வந்துள்ளார். அந்த கதையால் மிகவும் கவரப்பட்ட அமிதாப்பும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

அதன் பிறகு தான் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. விடாமுயற்சி படத்தின் எதிரொலி பாலிவுட் வரை சென்றுள்ளது. இப்பொழுது அமிதாப்பச்சன் அதை ட்ராப் செய்து விட்டார். எப்படியாவது அடுத்தடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என எதிர்பார்த்த  மகிழ்திருமேனிக்கு இப்பொழுது கைவசம் படங்கள் இல்லை.