1. Home
  2. கோலிவுட்

விஜய்யின் ஆசையை போட்டு உடைத்த இயக்குனர் பாசில்.. இன்று வரை நிறைவேறாத காரணம்

விஜய்யின் ஆசையை போட்டு உடைத்த இயக்குனர் பாசில்.. இன்று வரை நிறைவேறாத காரணம்
தமிழ் சினிமாவில் பேர் சொல்லும் படங்களில் இவையும் ஒன்று.

Actor Vijay: தன் நடிப்பாலும், செயலாலும் மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்து வரும் மாபெரும் நடிகர் தான் விஜய். இவரின் படமான லியோ படத்தின் எதிர்பார்ப்பை கொண்டு காத்திருக்கும் நிலையில், இவர் பட இயக்குனரான பாசில் பகிர்ந்த தகவலை பற்றி இங்கு காணலாம்.

தன் தந்தையின் சிபாரிசில் நடிக்க வந்து, தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் விஜய் மேற்கொள்ளும் படங்களும், திட்டங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க, பாசம், நகைச்சுவை மற்றும் நல்ல கருத்துள்ள கதைகளை எழுதுவதில் சிறந்த இயக்குனர் தான் பாசில்.

இவர் மலையாளத்தில் எண்ணற்ற படங்களை இயக்கி வெற்றிக் கண்டிருக்கிறார். மேலும் தமிழில் இவர் இயக்கத்தில் வெளிவந்த பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற படங்களின் மூலம் மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

அதை தொடர்ந்து 1997ம் ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை என்னும் படத்தை இயக்கினார். தமிழ் சினிமாவில் பேர் சொல்லும் படங்களில் இவையும் ஒன்று. அவ்வாறு இருக்க அப்பட பிடிப்பின் போது விஜய் தன்னிடம் அவரின் ஆசையை கூறியதாக தெரிவித்தார்.

விஜய்யின் படங்களில் நல்ல சண்டை காட்சிகளுக்கும், நடனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த வகையில் தன் படங்களில் இவற்றை தவிர்த்து, ஒரு பெர்ஃபார்மன்ஸ் படமாக நடிக்க ஆசைப்படுவதாக கூறினாராம்.

தற்பொழுது 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் தன் ஆரம்ப காலத்தில் பெர்ஃபார்மன்ஸ் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு, இன்று வரை அவை நிறைவேறாமல் இருந்து வருகிறதாம். மேலும் தற்பொழுது ஒரு பிரபலமாக மாறிய பின் இது போன்ற ஆசையை நிறைவேற்ற இவரின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்வி குறியாக முன்வைக்கப்படுகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.